பொது செய்தி

தமிழ்நாடு

ஏர் கலப்பை பூட்டி ஆடிப்பட்டத்துக்கு உழவு: பாரம்பரிய முறைக்கு குறையாத ஆர்வம்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
உடுமலை:கூடுதலாக மழை நீரை சேகரித்து, மண் வளத்தை பாதுகாக்க, பாரம்பரிய முறைப்படி, விளைநிலத்தில், ஏர் உழவை உடுமலை பகுதி விவசாயிகள் பின்பற்றி வருகின்றனர்.பருவமழையை அடிப்படையாகக்கொண்டு, மேற்கொள்ளப்படும் விவசாயத்தில், விளைநிலத்தை உழவு செய்வது முக்கிய பங்கு வகிக்கிறது.வழக்கமாக, தென்மேற்கு பருவமழைக்கு முன்பாக, மேற்கொள்ளப்படும் கோடை உழவு காரணமாக, பயிர்களை தாக்கும்
 ஏர் கலப்பை பூட்டி ஆடிப்பட்டத்துக்கு உழவு: பாரம்பரிய முறைக்கு குறையாத ஆர்வம்

உடுமலை:கூடுதலாக மழை நீரை சேகரித்து, மண் வளத்தை பாதுகாக்க, பாரம்பரிய முறைப்படி, விளைநிலத்தில், ஏர் உழவை உடுமலை பகுதி விவசாயிகள் பின்பற்றி வருகின்றனர்.பருவமழையை அடிப்படையாகக்கொண்டு, மேற்கொள்ளப்படும் விவசாயத்தில், விளைநிலத்தை உழவு செய்வது முக்கிய பங்கு வகிக்கிறது.வழக்கமாக, தென்மேற்கு பருவமழைக்கு முன்பாக, மேற்கொள்ளப்படும் கோடை உழவு காரணமாக, பயிர்களை தாக்கும் பூச்சிகளின் கூட்டுப்புழுக்கள் அழிக்கப்படுவது உட்பட பல்வேறு பலன்கள் கிடைப்பதாக, வேளாண்துறை தெரிவிக்கிறது.அதே போல், மழைக்காலத்தில், மேற்கொள்ளப்படும் உழவு, விளைநிலத்தில், மழை நீரை உள்வாங்கி, மண் வளத்தை பாதுகாக்க முக்கிய பங்கு வகிக்கிறது.உழவு செய்ய, டிராக்டர் உட்பட இயந்திரங்கள் பயன்பாடு அதிகரித்தாலும், காளைகளை பயன்படுத்தி, ஏர் உழவு செய்யும் பாரம்பரிய முறையை இன்றளவும், உடுமலை பகுதி விவசாயிகள் பின்பற்றி வருகின்றனர்.முன்பு, ஆடிப்பட்டம் உட்பட அனைத்து பட்டங்களிலும், சோளம், நிலக்கடலை, கொண்டைக்கடலை உட்பட மானாவாரி சாகுபடி விதைப்புக்கு, ஏர் உழவு முறையே பின்பற்றப்பட்டு வந்தது.உழவுக்குத்தேவையான காளைகளை பராமரிப்பதில் அதிகரித்த செலவினங்கள், முறையாக பயிற்சி பெற்றவர்கள் எண்ணிக்கை குறைவு; இயந்திரங்கள் வருகை உட்பட காரணங்களால், ஏர் உழவு முறை படிப்படியாக குறைந்தது.இருப்பினும், சிலர், தற்போதும், ஏர் கலப்பையால், விளைநிலத்தை உழுது ஆடிப்பட்டத்துக்கு தயாராகி வருகின்றனர்.விவசாயிகள் கூறுகையில், 'ஏர் கலப்பையால், உழவு செய்யும் போது, அதிக ஆழத்துக்கு உழவு செய்ய முடியும். இதனால், மழைக்காலத்தில், கூடுதலாக மழை நீர் விளைநிலத்தில், தேங்குவது உட்பட பல்வேறு பலன்கள் கிடைக்கிறது. நடைமுறை சிக்கல்களால், தற்போது, சீசன் சமயங்களில், இயந்திர உழவு முறையே கைகொடுக்கிறது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X