பொது செய்தி

தமிழ்நாடு

பசுஞ்சோலையாக மாறும் தனியார் நிறுவன வளாகம்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
உடுமலை:'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தின் கீழ், தனியார் நிறுவன வளாகத்தில், மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது.'வனத்துக்குள் திருப்பூர்-7' திட்டத்தின் கீழ், உடுமலை பகுதிகளில், விவசாய நிலங்கள், கோழிப்பண்ணை வளாகங்கள், தனியார் நிறுவன வளாகங்கள் என பல்வேறு பகுதிகளில், மரக்கன்றுகள் நடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.குடிமங்கலம் அருகேயுள்ள, பெரிய குமாரபாளையம்,
 பசுஞ்சோலையாக மாறும் தனியார் நிறுவன வளாகம்

உடுமலை:'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தின் கீழ், தனியார் நிறுவன வளாகத்தில், மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது.'வனத்துக்குள் திருப்பூர்-7' திட்டத்தின் கீழ், உடுமலை பகுதிகளில், விவசாய நிலங்கள், கோழிப்பண்ணை வளாகங்கள், தனியார் நிறுவன வளாகங்கள் என பல்வேறு பகுதிகளில், மரக்கன்றுகள் நடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.குடிமங்கலம் அருகேயுள்ள, பெரிய குமாரபாளையம், 'வாட்சன் இன்ப்ராபில்டு' நிறுவன வளாகத்தில், வேம்பு, தேக்கு, செம்மரம், சந்தனம், சிசு, குமிழ், மகிழம், நீர் மருது, வன்னி, பாதாம், புங்கன், பூவரசு, ஆயன் என, 700 மரக்கன்றுகள் நடப்பட்டது.இந்நிகழ்ச்சியில், நிறுவன அலுவலர்கள் ராமகிருஷ்ணன், பிரபாகரன், முருகேஷ், ராஜ்குமார், பாஸ்கர், செந்தில்வேலன் மற்றும் வெஸ்டாஸ் நிறுவன அலுவலர்கள் ஜோதிமணி, பிரசாத்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இத்திட்டத்தின் கீழ், இலவசமாக மரக்கன்று நடவு செய்து பராமரிக்க விருப்பம் உள்ளவர்கள், 90474 56666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என திட்ட குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X