பொது செய்தி

தமிழ்நாடு

தக்காளி மார்க்கெட் உயர்வு 15 கிலோ விலை ரூ.270

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு மொத்த காய்கறி மார்க்கெட்டில், 15 கிலோ தக்காளி நேற்று, 270 ரூபாய்க்கு விற்பனையானது.கிணத்துக்கடவு தினசரி மொத்த மார்க்கெட்டில், ஏலமுறையில் விற்பனை செய்யப்படுகிறது. விவசாயிகள் கொண்டு வரும் காய்கறியை, மொத்த வியாபாரிகள், கொள்முதல் செய்து, கேரளாவுக்கு கொண்டு செல்கின்றனர்.கடந்த வாரம் வரை, காய்கறிகளுக்கு விலையில்லாமல் இருந்தது. குறிப்பாக, 15 கிலோ

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு மொத்த காய்கறி மார்க்கெட்டில், 15 கிலோ தக்காளி நேற்று, 270 ரூபாய்க்கு விற்பனையானது.கிணத்துக்கடவு தினசரி மொத்த மார்க்கெட்டில், ஏலமுறையில் விற்பனை செய்யப்படுகிறது. விவசாயிகள் கொண்டு வரும் காய்கறியை, மொத்த வியாபாரிகள், கொள்முதல் செய்து, கேரளாவுக்கு கொண்டு செல்கின்றனர்.கடந்த வாரம் வரை, காய்கறிகளுக்கு விலையில்லாமல் இருந்தது. குறிப்பாக, 15 கிலோ எடையுள்ள கூடை தக்காளி, 150 - 170 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில், கூடைக்கு, 100 ரூபாய் அதிகரித்து, தக்காளி விலை, 270 ரூபாயாக உயர்ந்தது. இது, தக்காளி சாகுபடியாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது.நேற்றைய மார்க்கெட் நிலவரப்படி, கூடை தக்காளி - 270 ரூபாய், 20 கிலோ எடைகொண்ட கத்தரிக்காய் - 400, வெண்டைக்காய் கிலோ - 30, பச்சைமிளகாய் குண்டு ரகம் - 40, பச்சை மிளகாய் சம்பா ரகம் - 25, பாகற்காய் - 35, பீர்க்கங்காய் - 25, புடலங்காய் - 20 ரூபாய்க்கும் விற்றது.காய்கறி வரத்து ஓரளவு குறைந்துள்ள நிலையில், கடந்த வாரத்தை விட, அனைத்து காய்கறி விலையும் கணிசமாக உயர்ந்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X