பொது செய்தி

தமிழ்நாடு

நோயால் தடுமாறும் தென்னை சாகுபடி! வளர்ச்சி வாரியம் உதவ எதிர்பார்ப்பு

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
உடுமலை;திருமூர்த்திநகர், தென்னை வளர்ச்சி வாரிய ஆராய்ச்சி நிலையம் வாயிலாக தேவையான பயிற்சிகள், நோய்த்தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை, திருமூர்த்திநகரில் மத்திய அரசின், தென்னை வளர்ச்சி வாரியத்தின் நாற்றுப்பண்ணை மற்றும் ஆராய்ச்சி நிலையம், கடந்த, 2015ம் ஆண்டு, 102 ஏக்கர் பரப்பளவில் துவங்கப்பட்டது.இங்குள்ள நாற்றுப்பண்ணையில்

உடுமலை;திருமூர்த்திநகர், தென்னை வளர்ச்சி வாரிய ஆராய்ச்சி நிலையம் வாயிலாக தேவையான பயிற்சிகள், நோய்த்தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை, திருமூர்த்திநகரில் மத்திய அரசின், தென்னை வளர்ச்சி வாரியத்தின் நாற்றுப்பண்ணை மற்றும் ஆராய்ச்சி நிலையம், கடந்த, 2015ம் ஆண்டு, 102 ஏக்கர் பரப்பளவில் துவங்கப்பட்டது.இங்குள்ள நாற்றுப்பண்ணையில் ஆண்டுதோறும், 1.5 லட்சம் நாற்றுகள் வரை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வளாகத்தில், செயல் விளக்கத்திடலும் அமைக்கப்பட்டுள்ளது. தென்னை வளர்ச்சி வாரியத்தின், கொச்சி ஆராய்ச்சி நிலையம் மற்றும் கோவை வேளாண் பல்கலை., யின், ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில், தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில், பல்வேறு பயிற்சி வகுப்புகள், படிப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.அதேபோல், திருமூர்த்தி நகர் ஆராய்ச்சி நிலையத்திலும், பயிற்சிகள் வழங்க பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.திருமூர்த்திநகரில், தென்னை வளர்ச்சி வாரியம், நாற்றுப்பண்ணை செயல்பாடுகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. ஆனால், ஆராய்ச்சி நிலையத்துக்கான எவ்வித கட்டமைப்புகளும் உருவாக்கப்படவில்லை.திருப்பூர் மாவட்டத்தில், தென்னை சாகுபடியில், வெள்ளை ஈ, தாக்குதல் உட்பட பல்வேறு நோய்த்தாக்குதலால், சராசரி உற்பத்தி குறைந்து வருகிறது. இத்தகைய தாக்குதலை கட்டுப்படுத்த, தொழில்நுட்ப வழிகாட்டுதல் கிடைக்காமல், தற்போது வரை பிரச்னை தொடர்கதையாக உள்ளது.தென்னை ஆராய்ச்சி நிலையம் அருகில் இருந்தும், எவ்வித உதவியும் கிடைக்காதது விவசாயிகளை ஏமாற்றமடையச்செய்துள்ளது.எனவே, புதிய ரகங்கள், நோய்த்தடுப்புக்கான மருந்துகள், தொழில்நுட்பங்கள் கண்டறிதல் உட்பட பணிகளுக்காக அனைத்து கட்டமைப்புகளையும், திருமூர்த்திநகரில் ஏற்படுத்த வேண்டும்.ஆண்டுதோறும் தென்னை சாகுபடி பரப்பு அதிகரித்து வரும் நிலையில், இக்கோரிக்கை குறித்து, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, பல ஆயிரக்கணக்கான தென்னை விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X