சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கட்டடம் இடிந்து விழுந்து 3 பேர் பலி; மூவர் படுகாயம்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
அந்தியூர் : அந்தியூரில், கட்டடத்தின் முன்பகுதி இடிந்து விழுந்து மூன்று பேர் பலியாயினர். ஈரோடு மாவட்டம், அந்தியூரில் திங்கட்கிழமை தோறும் வாரச்சந்தை நடக்கும். கொரோனா காரணமாக, மூன்று மாதங்களாக நடக்காமல் இருந்த வாரச்சந்தை நேற்று கூடியது.பர்கூர் விவசாயிகள், தங்கள் தோட்டத்தில் விளைந்த பொருட்களை, அந்தியூர் சந்தையில் விற்பனை செய்வதற்காக, ஞாயிற்றுக்கிழமை இரவே அந்தியூர்
 கட்டடம் இடிந்து விழுந்து 3 பேர் பலி; மூவர் படுகாயம்

அந்தியூர் : அந்தியூரில், கட்டடத்தின் முன்பகுதி இடிந்து விழுந்து மூன்று பேர் பலியாயினர்.

ஈரோடு மாவட்டம், அந்தியூரில் திங்கட்கிழமை தோறும் வாரச்சந்தை நடக்கும். கொரோனா காரணமாக, மூன்று மாதங்களாக நடக்காமல் இருந்த வாரச்சந்தை நேற்று கூடியது.பர்கூர் விவசாயிகள், தங்கள் தோட்டத்தில் விளைந்த பொருட்களை, அந்தியூர் சந்தையில் விற்பனை செய்வதற்காக, ஞாயிற்றுக்கிழமை இரவே அந்தியூர் வந்து பஸ் ஸ்டாண்ட் பகுதி, தேர் வீதியில் இரவு தங்கி, மறுநாள் காலை சந்தையில் விற்பனை செய்வர்.நேற்று முன்தினம் அந்தியூர், தேர் வீதியில் ஒரு எலக்ட்ரிக்கல் கடை முன்புறம், ஆறு பேர் இரவில் துாங்கினர்.

நேற்று அதிகாலை, 1:00 மணியளவில் கடையின் முன்பகுதி திடீரென இடிந்து விழுந்தது. கட்டட இடிபாடுகளில் சிலர் சிக்கினர்.அவர்களை அந்தியூர் தீயணைப்பு துறையினர், போலீசார் வந்து மீட்டனர். இதில், 35 - 55 வயதுள்ள ஆண்கள் மூவர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். 17 - 45 வயதுள்ள ஆண்கள் மூவர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அந்தியூர், ஈரோடு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.போலீசார் கூறுகையில், 'மிகவும் பழமையான கட்டடம் இடிந்து விழுந்ததால், மூன்று பேர் பலியாகி உள்ளனர். கட்டட உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X