சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'பென்ஷன்' கணக்கு முடக்கம் ஓய்வு தமிழாசிரியை தவிப்பு

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
திருப்பூர் : 'வங்கி கணக்கு முடக்கப்பட்டதால், பென்ஷன் தொகையை பெற முடியவில்லை' என, ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியை, கலெக்டரிடம் புகார் அளித்துள்ளார். திருப்பூர் மாவட்டம், அவிநாசி அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் லட்சுமி. இவர், அவிநாசி கிளை ஸ்டேட் பாங்க் வாயிலாக பென்ஷன் பெற்று வருகிறார். இவரது கணக்கில், சம்பந்தமில்லாமல் 50 லட்சம்

திருப்பூர் : 'வங்கி கணக்கு முடக்கப்பட்டதால், பென்ஷன் தொகையை பெற முடியவில்லை' என, ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியை, கலெக்டரிடம் புகார் அளித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் லட்சுமி. இவர், அவிநாசி கிளை ஸ்டேட் பாங்க் வாயிலாக பென்ஷன் பெற்று வருகிறார். இவரது கணக்கில், சம்பந்தமில்லாமல் 50 லட்சம் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளதால், இவரது கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டது. மூன்று மாதம்மூன்று மாதங்களாகியும், வங்கியில் உரிய நடவடிக்கை எடுக்காததால், பென்ஷன் பெற முடியாமல் சிரமப்படுவதாக, கலெக்டர் அலுவலகம் மற்றும் எஸ்.பி., அலுவலகத்தில் முறையிட்டார்.

லட்சுமி கூறியதாவது:கடந்த மே 20ல், பணம் எடுக்க ஏ.டி.எம்., சென்றபோது, வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்தது. வங்கி கணக்கில், 50 லட்சம் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளதால், 'சைபர் கிரைம்' போலீஸ் அறிவுறுத்தல்படி, கணக்கு முடக்கப் பட்டுள்ளதாக வங்கி நிர்வாகம் தெரிவித்தது.'சைபர் கிரைம்'என் வங்கி கணக்கு முடக்கப் பட்டதால், பென்ஷன் தொகையை எடுக்க இயலவில்லை. கொரோனா ஊரடங்கு காலத்தில், பென்ஷன் பெற முடியாமல் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

வங்கி அதிகாரிகளிடம் கேட்டதற்கு, 'சைபர் கிரைம் போலீசார் விசாரணையில் இருப்பதால், வங்கி கணக்கு முடக்கப்பட்டிருக்கும். 'விசாரணை முடிந்து, போலீசார் கடிதம் கொடுத்தால் மட்டுமே சம்பந்தப்பட்ட வங்கி கணக்கு விடுவிக்கப்படும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X