சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மூத்த மகளின் காதல் விவகாரம் மகனை கொன்று தாய் தற்கொலை

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி : மூத்த மகளின் காதல் விவகாரத்தால், மகனை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்டார். கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் அடுத்த மிண்டிகிரி கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலிங்கம், 50; வேன் டிரைவர். இவரது மனைவி அம்சவேணி, 42; மகள்கள் பிரியா, 19; திரிஷா, 17; மகன் விஷ்ணு, 13. பிரியாவுக்கு ஆகஸ்ட் 21ல் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.பிரியாவும், அதே கிராமத்தைச் சேர்ந்த திருப்பதி, 19, என்ற

கிருஷ்ணகிரி : மூத்த மகளின் காதல் விவகாரத்தால், மகனை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் அடுத்த மிண்டிகிரி கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலிங்கம், 50; வேன் டிரைவர். இவரது மனைவி அம்சவேணி, 42; மகள்கள் பிரியா, 19; திரிஷா, 17; மகன் விஷ்ணு, 13. பிரியாவுக்கு ஆகஸ்ட் 21ல் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.பிரியாவும், அதே கிராமத்தைச் சேர்ந்த திருப்பதி, 19, என்ற வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். இதையறிந்த அம்சவேணி, நேற்று முன்தினம் பிரியாவை கண்டித்து உள்ளார். இதை, காதலன் திருப்பதிக்கு போனில் பிரியா தெரிவித்துள்ளார்.இதனால் இருவரும் இரவு, 10:00 மணியளவில் அவரவர் வீட்டில் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.

இருவரையும் உறவினர்கள் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.மகளின் நடவடிக்கையால் மனமுடைந்த அம்சவேணி நள்ளிரவு, 12:00 மணியளவில் இளைய மகள் திரிஷா, மகன் விஷ்ணு ஆகியோருடன் வீட்டின் அருகே உள்ள விவசாய கிணற்றில் குதித்து உள்ளார். சிறுவன் விஷ்ணு நீச்சல் தெரியாமல் தத்தளித்தபோது, அவரை அம்சவேணி நீரில் அழுத்தியதில், மூச்சுத் திணறி இறந்தார். திரிஷாவை யும் நீரில் அழுத்தியபோது, மோட்டார் பைப்பை திரிஷா இறுகப் பிடித்து, தப்பினார்.

அப்போது மயக்கமடைந்த அம்சவேணி நீரில் மூழ்கினார்.நேற்று அதிகாலை திரிஷாவின் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் வந்து, போச்சம்பள்ளி தீயணைப்பு வீரர்கள் உதவியோடு அவரை மீட்டனர். அம்சவேணி மற்றும் விஷ்ணுவை சடலமாக மீட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X