சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் மோசடி

Added : ஜூலை 20, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
திருப்பத்துார் : பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில், 35 லட்சம் ரூபாய் முறைகேடில் ஈடுபட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட 18 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருப்பத்துார் மாவட்டம், ஆலங்காயம் ஒன்றியம், நெக்னாமலை ஊராட்சியில், புருஷோத்தும குப்பம் கிராமத்தைச் சேர்ந்த அய்யம்மாள், 60, என்பவரின் மண் சுவர் வீடு கடந்த ஆண்டு ஜூலை 10ல் இடிந்து

திருப்பத்துார் : பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில், 35 லட்சம் ரூபாய் முறைகேடில் ஈடுபட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட 18 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருப்பத்துார் மாவட்டம், ஆலங்காயம் ஒன்றியம், நெக்னாமலை ஊராட்சியில், புருஷோத்தும குப்பம் கிராமத்தைச் சேர்ந்த அய்யம்மாள், 60, என்பவரின் மண் சுவர் வீடு கடந்த ஆண்டு ஜூலை 10ல் இடிந்து விழுந்தது. இதில் அய்யம்மாள் இறந்தார். 'அவருக்கு பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை வழங்காமல், ஊராட்சி செயலர் முறைகேடு செய்துள்ளார். அவர் வீடு கட்டியிருந்தால் இறந்திருக்க மாட்டார்' என, அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

வேலுார் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். ஆலங்காயம் ஊராட்சியில், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில், 2017 - 18ல் நெக்னாமலை, கிரிசமுத்திரம், வளையாம்பட்டு, மதனஞ்சேரி, பள்ளிப்பட்டு, ஜாப்ராபாத், தேவஸ்தானம் ஆகிய கிராமங்களில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் பட்டியலை ஆய்வு செய்தனர்.இதில், சுவர் இடிந்து இறந்த அய்யம்மாள் உள்ளிட்ட 23 பேருக்கு நிதி ஒதுக்கி, வீடுகள் கட்டியதாக கணக்கு காட்டி, அதிகாரிகளே கூட்டு சேர்ந்து 35 லட்சத்து 31 ஆயிரத்து 517 ரூபாய் முறைகேடில் ஈடுபட்டது தெரிந்தது.

இதையடுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர்களாக அப்போது பணியாற்றிய ரமேஷ்குமார், 51; வசந்தி, 52, உதவி பொறியாளர் கார்த்திகேயன், 46, மற்றும் ஊராட்சி செயலர்கள் என 18 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்தனர்.இவர்களுக்கு, ஊரக வளர்ச்சி துறை சார்பில் '17 - ஏ' குற்ற குறிப்பாணை எனும் 'மெமோ' வழங்கப்பட்டுள்ளது.

இவர்கள் 'சஸ்பெண்ட்' செய்யப்படுவர் என அதிகாரிகள் கூறினர்.இன்னும் பலர்சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:கடந்த 10 ஆண்டுகளாக தமிழகம் முழுதும் ஊரக வளர்ச்சி துறையில் பணியாற்றிய அலுவலர்கள் பலர், மத்திய அரசின் திட்டங்களில் வந்த நிதியை, இறந்தவர்கள், முதியவர்கள், பினாமி பெயர்களில் எடுத்து, பல கோடி ரூபாய் வரை ஊழல் செய்துள்ளனர் .இதற்காக போலி பெயர்களில் வங்கிக் கணக்கை ஆரம்பித்து, பணம் வந்ததும் கணக்கை ரத்து செய்து விட்டனர். எனவே, மத்திய அரசின் திட்ட பயனாளிகள் குறித்து விரிவான விசாரணை நடத்தினால் பலர் சிக்குவர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R Ravikumar - chennai ,இந்தியா
20-ஜூலை-202112:55:29 IST Report Abuse
R Ravikumar இறைவன் தான் எளிய மக்களை காப்பாற்ற வேண்டும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X