செயல்படாமல் கிடக்கும் 8 லட்சம் செட்டாப் பாக்ஸ்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

செயல்படாமல் கிடக்கும் 8 லட்சம் 'செட்டாப் பாக்ஸ்'

Added : ஜூலை 20, 2021
Share
ஈரோடு : ''தமிழகம் முழுதும் 8 லட்சம் 'செட்டாப் பாக்ஸ்'கள் செயல்படாமல் உள்ளன,'' என, அரசு கேபிள் 'டிவி' நிறுவன தலைவர் சிவகுமார் கூறினார். அவர் கூறியதாவது:தமிழகம் முழுதும் 8 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் செயல்படாமல் உள்ளன. அவை முறையாக அரசிடம் திரும்ப ஒப்படைக்கப்படவில்லை; திரும்ப ஒப்படைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். குறைந்த கட்டணத்தில், மக்கள் நிறைந்த சேவையை பெற

ஈரோடு : ''தமிழகம் முழுதும் 8 லட்சம் 'செட்டாப் பாக்ஸ்'கள் செயல்படாமல் உள்ளன,'' என, அரசு கேபிள் 'டிவி' நிறுவன தலைவர் சிவகுமார் கூறினார்.

அவர் கூறியதாவது:தமிழகம் முழுதும் 8 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் செயல்படாமல் உள்ளன. அவை முறையாக அரசிடம் திரும்ப ஒப்படைக்கப்படவில்லை; திரும்ப ஒப்படைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். குறைந்த கட்டணத்தில், மக்கள் நிறைந்த சேவையை பெற முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.கிராமப்புற பகுதி முழுதும், அரசு கேபிள் இணையதள வசதி செய்து கொடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி பணிகள் நடக்கின்றன. அரசு கேபிளுக்கு பதில், தனியார் கேபிள் இணைப்பு பெற, பொதுமக்கள் வலியுறுத்தப்படுவதாக புகார் வருகிறது. இது உறுதி செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X