பொது செய்தி

தமிழ்நாடு

கொலையானவர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
நாகப்பட்டினம் : ஏ.டி.எம்., மையத்தில் கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்திற்கு, பாரத ஸ்டேட் வங்கி சார்பில், 3 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது. திருவாரூர் அடுத்த கூடுரில் எஸ்.பி.ஐ., வங்கியின் ஏ.டி.எம்., மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த மாதம் 18ம் தேதி, நள்ளிரவில் கொள்ளை முயற்சி நடந்தது. வணிக வளாக நிர்வாகி தமிழரசன், 68, கொள்ளையர்களை தடுக்க முயற்சித்தார். அப்போது, தமிழரசன்

நாகப்பட்டினம் : ஏ.டி.எம்., மையத்தில் கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்திற்கு, பாரத ஸ்டேட் வங்கி சார்பில், 3 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது.

திருவாரூர் அடுத்த கூடுரில் எஸ்.பி.ஐ., வங்கியின் ஏ.டி.எம்., மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த மாதம் 18ம் தேதி, நள்ளிரவில் கொள்ளை முயற்சி நடந்தது. வணிக வளாக நிர்வாகி தமிழரசன், 68, கொள்ளையர்களை தடுக்க முயற்சித்தார். அப்போது, தமிழரசன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.இந்நிலையில் எஸ்.பி.ஐ., சென்னை மண்டல பொது மேலாளர் அமித் வர்மா, தமிழரசன் மனைவி கமலா, 60, என்பவரிடம், 3 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, நாகை வங்கி கிளையில் நேற்று வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X