பொது செய்தி

தமிழ்நாடு

சிஞ்சுவாடி கோவில் நிலம் 124 ஏக்கர் மீட்கப்படுமா?

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி : பொள்ளாச்சி சிஞ்சுவாடி விநாயகர் கோவிலுக்கு சொந்தமான 12.16 ஏக்கர் நிலத்தை சுவாதீனத்தில் வைத்திருந்தவர், தானாக முன் வந்து அறநிலைய துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்; மீதம் உள்ள 124 ஏக்கர் ஆக்கிரமிப்பில் உள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி, குண்டலப்பட்டியில் உள்ள சிஞ்சுவாடி விநாயகர் கோவிலுக்கு சொந்தமான 12.16 ஏக்கர் நிலத்தை பயன்படுத்திய லட்சுமாபுரத்தைச் சேர்ந்த

பொள்ளாச்சி : பொள்ளாச்சி சிஞ்சுவாடி விநாயகர் கோவிலுக்கு சொந்தமான 12.16 ஏக்கர் நிலத்தை சுவாதீனத்தில் வைத்திருந்தவர், தானாக முன் வந்து அறநிலைய துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்; மீதம் உள்ள 124 ஏக்கர் ஆக்கிரமிப்பில் உள்ளது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி, குண்டலப்பட்டியில் உள்ள சிஞ்சுவாடி விநாயகர் கோவிலுக்கு சொந்தமான 12.16 ஏக்கர் நிலத்தை பயன்படுத்திய லட்சுமாபுரத்தைச் சேர்ந்த ராஜேஷ், கடந்தாண்டு அக்., மாதம் ஹிந்து சமய அறநிலைய துறை அதிகாரிகளிடம் நிலத்தை ஒப்படைத்தார்.நேற்று நிலத்தை அளவீடு செய்யும் பணி நடந்தது. மாரியம்மன், அங்காளம்மன் கோவில் செயல் அலுவலர் விமலா, கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் நிலம் அளவீடு செய்யப்பட்டது. சிஞ்சுவாடியில் மீதம் உள்ள 124 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது. 'கோவில் நிலங்கள் அனைத்தையும் மீட்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X