சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போதை பொருள் கடத்தல் நைஜீரிய இளைஞர் கைது

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
கோவை : டில்லியில் இருந்து கோவைக்கு போதைப் பொருள் கடத்தி வந்த நைஜீரிய இளைஞரை, மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.கோவைக்கு ரயிலில் போதைப் பொருள் கடத்தி வரப்படுவதாக, மதுரை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து நேற்று, கோவை ரயில்வே ஸ்டேஷன் வந்த அவர்கள், பயணியரை தீவிரமாக சோதனை செய்தனர்.டில்லியில் இருந்து வந்த
 போதை பொருள் கடத்தல் நைஜீரிய இளைஞர் கைது

கோவை : டில்லியில் இருந்து கோவைக்கு போதைப் பொருள் கடத்தி வந்த நைஜீரிய இளைஞரை, மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

கோவைக்கு ரயிலில் போதைப் பொருள் கடத்தி வரப்படுவதாக, மதுரை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து நேற்று, கோவை ரயில்வே ஸ்டேஷன் வந்த அவர்கள், பயணியரை தீவிரமாக சோதனை செய்தனர்.டில்லியில் இருந்து வந்த கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலில் இறங்கிய நைஜீரிய இளைஞரின் உடைமைகளை சோதனை செய்தனர். இதில், கார்பன் பேப்பர்கள் சுற்றப்பட்ட எட்டு பாக்கெட்டுகள் இருந்தன. அதில், 2 கிலோ 235 கிராம் எடையுள்ள 'ஆம்பேட்டமைன்' எனும் போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

இதன் சர்வதேச மதிப்பு 1.50 கோடி ரூபாய்.கடத்தி வந்தவர், நைஜீரிய நாட்டைச் சேர்ந்த எட்வின் கிங்ஸ்லி; திருப்பூரில் தங்கி ரெடிமேட் ஆடைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்துள்ளார். இவர் அடிக்கடி டில்லி யில் இருந்து போதை பொருளை கடத்தி வந்து திருப்பூரில் விற்பனை செய்தது தெரிந்தது.அவரை கைது செய்த அதிகாரிகள், மதுரையில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X