பொது செய்தி

தமிழ்நாடு

நீர்த்தேக்க தொட்டியில் ஏறி பாடம் படிக்கும் மாணவர்கள்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
நாமக்கல் : மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது அமர்ந்து மாணவர்கள் 'ஆன்லைன்' வகுப்புகளில் பாடம் படிக்கின்றனர். நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றியம் ஊனந்தாங்கல் பஞ். வரகூர் கோம்பை செக்கிடி கரியாம்பட்டி கிராமங்கள் கொல்லிமலை அடிவாரத்தில் அமைந்துள்ளன. இங்கு எந்த மொபைல் போன் சிக்னலும் கிடைப்பதில்லை. உயரமான பகுதிக்கு சென்றுதான் பேச முடியும். அதுவும் விட்டு

நாமக்கல் : மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது அமர்ந்து மாணவர்கள் 'ஆன்லைன்' வகுப்புகளில் பாடம் படிக்கின்றனர்.
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றியம் ஊனந்தாங்கல் பஞ். வரகூர் கோம்பை செக்கிடி கரியாம்பட்டி கிராமங்கள் கொல்லிமலை அடிவாரத்தில் அமைந்துள்ளன. இங்கு எந்த மொபைல் போன் சிக்னலும் கிடைப்பதில்லை. உயரமான பகுதிக்கு சென்றுதான் பேச முடியும். அதுவும் விட்டு விட்டுதான் கேட்கும்.ஊரடங்கால் பள்ளி கல்லுாரிகள் மூடப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலமே வகுப்பு நடக்கிறது.

சிக்னல் கிடைக்காததால் இப்பகுதி மாணவர்கள் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி அமர்ந்து ஆன்லைன் வகுப்புகளை கவனித்து வருகின்றனர்.'மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இந்தப் பகுதிக்கு மொபைல் போன் டவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X