சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆக்சிஜன் உதவியுடன் கலெக்டரிடம் புகார்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
தஞ்சாவூர் : வியாபாரத்தில், 18.56 லட்சம் ரூபாய் ஏமாற்றிய நபரால் உடல்நலம் பாதிக்கப்பட்ட நெல் வியாபாரி, ஆக்சிஜன் உதவியுடன், தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தார். தஞ்சாவூர் மாவட்டம், பருத்தியப்பர் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல், 54; உடல்நிலை பாதிக்கப்பட்டு, ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று இவர், லோடு ஆட்டோவில் ஆக்சிஜன் சிலிண்டர்

தஞ்சாவூர் : வியாபாரத்தில், 18.56 லட்சம் ரூபாய் ஏமாற்றிய நபரால் உடல்நலம் பாதிக்கப்பட்ட நெல் வியாபாரி, ஆக்சிஜன் உதவியுடன், தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், பருத்தியப்பர் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல், 54; உடல்நிலை பாதிக்கப்பட்டு, ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று இவர், லோடு ஆட்டோவில் ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தியபடி, உறவினர்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.அதில், 'நெல் விற்பனை செய்து வருகிறேன். சானுார்பட்டியைச் சேர்ந்த அண்ணாதுரை என்ற வியாபாரி, 18.56 லட்சம் ரூபாய் தராமல் மோசடி செய்து விட்டார்.'இதனால், என் உடல்நிலை பாதிக்கப்பட்டு மோசமானது. நண்பர்கள் உதவியுடன், ஆக்சிஜன் மூலம் உயிர் பிழைத்து வருகிறேன். என் இறப்புக்கு முன், அண்ணாதுரை எனக்கு தர வேண்டிய தொகையை பெற்றுத் தரவேண்டும்' என தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X