சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மீனவ பெண்கள் மறியல்: ஸ்தம்பித்தது கடலுார்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
கடலுார் : சுருக்குமடி வலைக்கு அனுமதி கோரி, கடலுாரில் மீனவப் பெண்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதால், கடலுார் ஸ்தம்பித்தது.சுருக்குமடி வலை தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடலுாரில் மீனவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று தேவனாம்பட்டினம், ராசாப்பேட்டையில் மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தடுப்புக் கட்டைகடலுாரில் போராட்டத்தில்
 மீனவ பெண்கள் மறியல்: ஸ்தம்பித்தது கடலுார்

கடலுார் : சுருக்குமடி வலைக்கு அனுமதி கோரி, கடலுாரில் மீனவப் பெண்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதால், கடலுார் ஸ்தம்பித்தது.சுருக்குமடி வலை தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடலுாரில் மீனவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று தேவனாம்பட்டினம், ராசாப்பேட்டையில் மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தடுப்புக் கட்டைகடலுாரில் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவப் பெண்கள், கலெக்டரை சந்தித்து மனு அளிக்க சென்றனர். வன்னியர்பாளையம் அருகே தடுப்பு கட்டைகள் அமைத்து போலீசார் தடுத்து நிறுத்தினர். போலீசாருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எஸ்.பி., சக்திகணேசன், சில பெண்கள் மட்டும் கலெக்டரை சந்திக்க அனுமதி அளித்தார். அங்கிருந்து புறப்பட்ட மீனவ பெண்கள் பாரதி சாலையில், நகராட்சி பூங்கா அருகே நான்கு முனை சந்திப்பில் பகல் 1:15 மணியளவில், திடீரென அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.பேச்சுவார்த்தைபோலீசார், அதிகாரிகள் பல மணி நேரம் பேச்சு நடத்தியும் எந்த உடன்பாடும் ஏற்படாமல், விடிய விடிய போராட்டம் நடந்தது. மறியலால் கடலுார் - புதுச்சேரி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதித்தது. மஞ்சக்குப்பம் மைதானம் வழியாக திருப்பி விடப்பட்ட வாகனங்கள் சிறு சிறு தெருக்கள் வழியாக சென்றதால் கடலுார் நகரமே ஸ்தம்பித்தது.ராசாப்பேட்டையில் மறியலில் ஈடுபட்டவர்கள், திடீரென கடலில் இறங்கி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X