சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாலம் கட்டும் பணியால் குடிநீர் குழாயில் உடைப்பு

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
குஜிலியம்பாறை : பாளையம் -- கரூர் ரோடு அகலப்படுத்தும் பணிக்காக பாளையத்தருகே புதிய பாலம் கட்டும் பணி நடக்கிறது. பணியின் போது குக்கிராமங்களுக்கு செல்லும் காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், பாரதிநகர், மேட்டுக்களத்துார், முத்தம்பட்டி, வாண்ராயன்பட்டி உட்பட 9 கிராமங்களில் காவிரி குடிநீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் குடிநீரின்றி

குஜிலியம்பாறை : பாளையம் -- கரூர் ரோடு அகலப்படுத்தும் பணிக்காக பாளையத்தருகே புதிய பாலம் கட்டும் பணி நடக்கிறது.

பணியின் போது குக்கிராமங்களுக்கு செல்லும் காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், பாரதிநகர், மேட்டுக்களத்துார், முத்தம்பட்டி, வாண்ராயன்பட்டி உட்பட 9 கிராமங்களில் காவிரி குடிநீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் குடிநீரின்றி அவதிப்படுகின்றனர். மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் ராஜரத்தினம் கூறியதாவது: ரோடு அகலப்படுத்த பாலம் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடக்கிறது. இப்பணியின் போது குழாய் உடைப்பால், 9 கிராமத்தினர் குடிநீரின்றி அவதிப்படுகின்றனர். பாலம் பணியை விரைந்து முடித்து, குடிநீர் குழாயை சரி செய்ய வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X