பொது செய்தி

தமிழ்நாடு

விவசாய மின் இணைப்புகளை துண்டிக்கும் பணி தீவிரம்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
கம்பம் : மின்வாரிய விஜிலென்ஸ் டி.ஜி.பி., ரவி தலைமையிலான குழுவினர் லோயர்கேம்ப் முதல் தேனி வரை முல்லைப் பெரியாற்றில் தண்ணீர் எடுக்கும் விவசாயிகளின் மின் இணைப்பை கண்டறிந்து துண்டிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.தேனி மாவட்டத்தில் கம்பம் பள்ளத்தாக்கில் மானாவாரி நிலங்களில் விவசாயம் செய்வதற்காக புன்செய் நிலங்களில்

கம்பம் : மின்வாரிய விஜிலென்ஸ் டி.ஜி.பி., ரவி தலைமையிலான குழுவினர் லோயர்கேம்ப் முதல் தேனி வரை முல்லைப் பெரியாற்றில் தண்ணீர் எடுக்கும் விவசாயிகளின் மின் இணைப்பை கண்டறிந்து துண்டிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.தேனி மாவட்டத்தில் கம்பம் பள்ளத்தாக்கில் மானாவாரி நிலங்களில் விவசாயம் செய்வதற்காக புன்செய் நிலங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து, பல கி.மீ., துாரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்கின்றனர். லோயர்கேம்பில் ஆரம்பித்து தேனி வரை நுாற்றுக்கணக்கான விவசாயிகள் இதில் ஈடுபட்டுள்ளனர். அவ்வாறு செய்வது சட்டவிரோதம் எனக்கூறி, மின் இணைப்புகளை துண்டிக்கும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

நேற்று காலை மின்வாரிய விஜிலென்ஸ் டி.ஜி.பி., தலைமையில் மதுரை மண்டல தலைமை மின்வாரிய பொறியாளர் பாஸ்கரன், தேனி மேற்பார்வை பொறியாளர் (பொ) லட்சுமி, கோட்ட பொறியாளர் ரமேஷ், போலீஸ், வருவாய்த்துறையினர் ஆய்வில் பங்கேற்றனர். நுாற்றுக் கணக்கான மின் இணைப்புகள் கண்டறியப்பட்டு துண்டிக்கும் பணி துவங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.எதிர்ப்புஇதற்கு விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் நாராயணசாமி, செயலாளர் கே.ஆர்.ஜெயப்பாண்டியன், பொருளாளர் நவீன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அவர்கள் கூறியது: இது முழுக்க முழுக்க நிதியமைச்சர் தியாகராஜன் துாண்டுதலில் விவசாயிகளை வஞ்சிக்க எடுக்கப்படும் நடவடிக்கையாகும்எங்களின் நிலத்திலிருந்து தண்ணீர் எடுத்து நிலத்தடி நீர் இல்லாத மானாவாரி நிலங்களுக்கு கொண்டு செல்கிறோம். இது எப்படி சட்டவிரோதம். இது தொடர்பாக விவசாயிகள் கூட்டத்தை கூட்டி மேல் நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும், என்றனர்.ஆனால் முல்லைப் பெரியாற்றிலிருந்து சட்டவிரோதமாக தண்ணீர் எடுக்கும் மின் இணைப்புகள் மட்டும் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்வாரியம் கூறியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X