சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சந்தனமரம் கடத்திய மேலும் ஒருவர் பலி

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
மூணாறு : கேரளா இடுக்கி மாவட்டம் மறையூர் அருகே சந்தனமரம் வெட்டி கடத்திய சம்பவத்தில் தமிழகத்தை சேர்ந்த இன்னொருவர் பாறையில் இருந்து தவறி விழுந்து இறந்தது தெரியவந்துள்ளது. மூணாறு அருகே மறையூர் சந்தன மரக்காட்டில் தமிழகத்தை சேர்ந்த 4 பேர் ஜூலை 15 சந்தன மரம் வெட்டி தலைசுமையாக கடத்தி சென்றனர். காந்தலுார் சந்திரமண்டலம் பகுதியில் பாறையில் இருந்து தவறி விழுந்து

மூணாறு : கேரளா இடுக்கி மாவட்டம் மறையூர் அருகே சந்தனமரம் வெட்டி கடத்திய சம்பவத்தில் தமிழகத்தை சேர்ந்த இன்னொருவர் பாறையில் இருந்து தவறி விழுந்து இறந்தது தெரியவந்துள்ளது.

மூணாறு அருகே மறையூர் சந்தன மரக்காட்டில் தமிழகத்தை சேர்ந்த 4 பேர் ஜூலை 15 சந்தன மரம் வெட்டி தலைசுமையாக கடத்தி சென்றனர். காந்தலுார் சந்திரமண்டலம் பகுதியில் பாறையில் இருந்து தவறி விழுந்து திருப்பத்துார் மாவட்டம் ஜவ்வாதுமலையைச் சேர்ந்த சதீஷ் 27, இறந்தார். அவரது அலைபேசியை வைத்து போலீசார் விசாரித்தனர். ஒருவர் மாயமானது தெரியவந்தது.மறையூர் இன்ஸ்பெக்டர் பிஜோய் தலைமையிலான போலீசார் தேடினர். சதீஷ் உடல் கிடந்த இடத்தில் இருந்து 300 அடி தொலைவில் இறந்து கிடந்த அந்தநபரின் உடலை மீட்டனர்.

அவர் திருநெல்வேலியை சேர்ந்த மாயவன் 40, என்பதும், அவரும் பாறையில் இருந்து விழுந்து இறந்ததும் தெரியவந்தது. இவர் மீது பாலக்காட்டில் கஞ்சா வழக்கு நிலுவையில் இருப்பதும், சில ஆண்டுக்கு முன்பு காந்தலுார் அருகே சந்தன கட்டை கடத்தல் வழக்கில் சிக்கியவர் தலைமறைவானதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X