பொது செய்தி

தமிழ்நாடு

பெரியாறு அணை நீர்மட்டம் 130 அடியை எட்டியது

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
தேக்கடி, : நீர்பிடிப்பில் பெய்து வரும் தொடர்மழையால் பெரியாறு அணை நீர்மட்டம் 130 அடியை எட்டியது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நீர்பிடிப்பில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. நேற்று காலை 8:30 மணி நிலவரப்படி தேக்கடியில் 15 மி.மீ., பெரியாறில் 12.8 மி.மீ., மழை பெய்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2324 கன அடியாக இருந்தது. தமிழகப்பகுதிக்கு குடிநீர், சாகுபடிக்காக 1200 கன அடி

தேக்கடி, : நீர்பிடிப்பில் பெய்து வரும் தொடர்மழையால் பெரியாறு அணை நீர்மட்டம் 130 அடியை எட்டியது.

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நீர்பிடிப்பில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. நேற்று காலை 8:30 மணி நிலவரப்படி தேக்கடியில் 15 மி.மீ., பெரியாறில் 12.8 மி.மீ., மழை பெய்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2324 கன அடியாக இருந்தது. தமிழகப்பகுதிக்கு குடிநீர், சாகுபடிக்காக 1200 கன அடி திறந்து விடப்பட்டுள்ளது. தொடர்மழையால் நீர்மட்டம் நேற்று மாலை 4:00 மணி நிலவரப்படி 130 அடியை எட்டியது (மொத்த உயரம் 152 அடி). தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பெரியாறு நீர்மின்நிலையத்தில் 3 ஜெனரேட்டர்களில் 108 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X