ஆள்மாறாட்டத்தில் ரூ.3.5 கோடி நிலம் மோசடி அதிகாரிகளின் துணையோடு பத்திர பதிவு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆள்மாறாட்டத்தில் ரூ.3.5 கோடி நிலம் மோசடி அதிகாரிகளின் துணையோடு பத்திர பதிவு

Added : ஜூலை 20, 2021
Share
திருநெல்வேலி : திருநெல்வேலியில் அதிகாரிகள் துணையோடு ரூ. 3.5 கோடி நிலத்தை போலி பத்திரபதிவு செய்தவர்கள் தலைமறைவாயினர். எஸ்.பி., மணிவண்ணன் நடவடிக்கையால் நிலம் மீட்கப்பட்டது.திருநெல்வேலியை சேர்ந்தவர் பழனிகுமார் 59. இவரது தந்தை ரத்தினவேலுக்கு சொந்தமான 3 ஏக்கர் 53 சென்ட் நிலம் வள்ளியூரில் உள்ளது. அதன் மதிப்பு ரூ.3.5 கோடி. ரத்தினவேல் 2017 ல் இறந்துவிட்டார். இதனை அறிந்த மோசடி கும்பல்,

திருநெல்வேலி : திருநெல்வேலியில் அதிகாரிகள் துணையோடு ரூ. 3.5 கோடி நிலத்தை போலி பத்திரபதிவு செய்தவர்கள் தலைமறைவாயினர்.
எஸ்.பி., மணிவண்ணன் நடவடிக்கையால் நிலம் மீட்கப்பட்டது.திருநெல்வேலியை சேர்ந்தவர் பழனிகுமார் 59. இவரது தந்தை ரத்தினவேலுக்கு சொந்தமான 3 ஏக்கர் 53 சென்ட் நிலம் வள்ளியூரில் உள்ளது. அதன் மதிப்பு ரூ.3.5 கோடி. ரத்தினவேல் 2017 ல் இறந்துவிட்டார். இதனை அறிந்த மோசடி கும்பல், ரத்தினவேல் உயிரோடு இருப்பது போலவும் அவர் வி.எம்.சத்திரத்தை சேர்ந்த சிங்ககுமாருக்கு நிலத்தை விற்பனை செய்வதாகவும் கங்கைகொண்டானில் சார்பதிவாளர் மயில்சாமி முன்னிலையில் போலியான பத்திர பதிவு மேற்கொண்டனர்.

இதுகுறித்து அறிந்த பழனிக்குமார், எஸ்.பி., மணிவண்ணனிடம் புகார் செய்தார். நிலஅபகரிப்பு தடுப்பு பிரிவு டி.எஸ்.பி., பர்னபாஸ், இன்ஸ்பெக்டர் சாந்தி, எஸ்.ஐ., திருமலை தலைமையில் போலீசார் சம்மன் அனுப்பி விசாரணையை துவக்கினர். போலீசார் விசாரிப்பதையறிந்ததும் அந்த கும்பல் மோசடி பத்திரத்தை சார்பதிவாளர் அலுவலகத்தில் ரத்துசெய்தனர்.நிலம் மீட்கப்பட்டு பழனிகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதுகுறித்து எஸ்.பி., மணிவண்ணன் கூறுகையில், நிலம் மீட்கப்பட்டுள்ளது. இருப்பினும் மோசடியின் பின்னணியில் உள்ள போலி நபர்கள், பத்திர பதிவிற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் குறித்து விசாரித்துவருகிறோம் என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X