சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இன்றைய க்ரைம் ரவுண்ட்அப்

Updated : ஜூலை 20, 2021 | Added : ஜூலை 20, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
தமிழக நிகழ்வுகள்1. பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் மோசடிதிருப்பத்துார் : பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில், 35 லட்சம் ரூபாய் முறைகேடில் ஈடுபட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட 18 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.திருப்பத்துார் மாவட்டம், ஆலங்காயம் ஒன்றியம், நெக்னாமலை ஊராட்சியில், புருஷோத்தும குப்பம் கிராமத்தைச் சேர்ந்த அய்யம்மாள், 60,

தமிழக நிகழ்வுகள்
1. பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் மோசடி
திருப்பத்துார் : பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில், 35 லட்சம் ரூபாய் முறைகேடில் ஈடுபட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட 18 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருப்பத்துார் மாவட்டம், ஆலங்காயம் ஒன்றியம், நெக்னாமலை ஊராட்சியில், புருஷோத்தும குப்பம் கிராமத்தைச் சேர்ந்த அய்யம்மாள், 60, என்பவரின் மண் சுவர் வீடு கடந்த ஆண்டு ஜூலை 10ல் இடிந்து விழுந்தது. இதில் அய்யம்மாள் இறந்தார். 'அவருக்கு பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை வழங்காமல், ஊராட்சி செயலர் முறைகேடு செய்துள்ளார். அவர் வீடு கட்டியிருந்தால் இறந்திருக்க மாட்டார்' என, அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.latest tamil newsவேலுார் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். ஆலங்காயம் ஊராட்சியில், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில், 2017 - 18ல் நெக்னாமலை, கிரிசமுத்திரம், வளையாம்பட்டு, மதனஞ்சேரி, பள்ளிப்பட்டு, ஜாப்ராபாத், தேவஸ்தானம் ஆகிய கிராமங்களில் தேர்வு செய்யப் பட்ட பயனாளிகள் பட்டியலை ஆய்வு செய்தனர்.இதில், சுவர் இடிந்து இறந்த அய்யம்மாள் உள்ளிட்ட 23 பேருக்கு நிதி ஒதுக்கி, வீடுகள் கட்டியதாக கணக்கு காட்டி, அதிகாரிகளே கூட்டு சேர்ந்து 35 லட்சத்து 31 ஆயிரத்து 517 ரூபாய் முறைகேடில் ஈடுபட்டது தெரிந்தது.

இதையடுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர்களாக அப்போது பணியாற்றிய ரமேஷ்குமார், 51; வசந்தி, 52, உதவி பொறியாளர் கார்த்திகேயன், 46, மற்றும் ஊராட்சி செயலர்கள் என 18 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்தனர்.இவர்களுக்கு, ஊரக வளர்ச்சி துறை சார்பில் '17 - ஏ' குற்ற குறிப்பாணை எனும் 'மெமோ' வழங்கப்பட்டுள்ளது.

இவர்கள் 'சஸ்பெண்ட்' செய்யப்படுவர் என அதிகாரிகள் கூறினர்.இன்னும் பலர்சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:கடந்த 10 ஆண்டுகளாக தமிழகம் முழுதும் ஊரக வளர்ச்சி துறையில் பணியாற்றிய அலுவலர்கள் பலர், மத்திய அரசின் திட்டங்களில் வந்த நிதியை, இறந்தவர்கள், முதியவர்கள், பினாமி பெயர்களில் எடுத்து, பல கோடி ரூபாய் வரை ஊழல் செய்துள்ளனர் .இதற்காக போலி பெயர்களில் வங்கிக் கணக்கை ஆரம்பித்து, பணம் வந்ததும் கணக்கை ரத்து செய்து விட்டனர். எனவே, மத்திய அரசின் திட்ட பயனாளிகள் குறித்து விரிவான விசாரணை நடத்தினால் பலர் சிக்குவர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

2. பாலியல் வழக்கு: வாலிபருக்கு 32 ஆண்டு சிறை
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே கோவிலான்தோப்பைச் சேர்ந்தவர் அரவிந்த் 22. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். கார்படி 2019ம் ஆண்டு நவ., 6ம் தேதி முத்துப்பேட்டை போலீசார் அவரை கைது செய்தனர்.திருவாரூர் விரைவு மகிளா நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. விசாரித்த நீதிபதி சுந்தரராஜன் குற்றம் சுமத்தப்பட்ட அரவிந்திற்கு 32 ஆண்டுகள் கடுங்காவல் சிறை 25 ஆயிரம் ரூபாய் அபராதம்விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.


latest tamil news3. மீனவ பெண்கள் மறியல்: ஸ்தம்பித்தது கடலுார்
கடலுார் : சுருக்குமடி வலைக்கு அனுமதி கோரி, கடலுாரில் மீனவப் பெண்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதால், கடலுார் ஸ்தம்பித்தது.சுருக்குமடி வலை தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடலுாரில் மீனவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று தேவனாம்பட்டினம், ராசாப்பேட்டையில் மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தடுப்புக் கட்டைகடலுாரில் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவப் பெண்கள், கலெக்டரை சந்தித்து மனு அளிக்க சென்றனர். வன்னியர்பாளையம் அருகே தடுப்பு கட்டைகள் அமைத்து போலீசார் தடுத்து நிறுத்தினர்.


latest tamil newsபோலீசாருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எஸ்.பி., சக்திகணேசன், சில பெண்கள் மட்டும் கலெக்டரை சந்திக்க அனுமதி அளித்தார். அங்கிருந்து புறப்பட்ட மீனவ பெண்கள் பாரதி சாலையில், நகராட்சி பூங்கா அருகே நான்கு முனை சந்திப்பில் பகல் 1:15 மணியளவில், திடீரென அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.பேச்சுவார்த்தைபோலீசார், அதிகாரிகள் பல மணி நேரம் பேச்சு நடத்தியும் எந்த உடன்பாடும் ஏற்படாமல், விடிய விடிய போராட்டம் நடந்தது. மறியலால் கடலுார் - புதுச்சேரி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதித்தது. மஞ்சக்குப்பம் மைதானம் வழியாக திருப்பி விடப்பட்ட வாகனங்கள் சிறு சிறு தெருக்கள் வழியாக சென்றதால் கடலுார் நகரமே ஸ்தம்பித்தது.ராசாப்பேட்டையில் மறியலில் ஈடுபட்டவர்கள், திடீரென கடலில் இறங்கி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

4. லாரி திருட்டு வழக்கில் மேலும் 2 பேர் கைது; திருடுபோன லாரி பறிமுதல்
ஆத்தூர்: சேலம் மாவட்டம், ஆத்தூர், புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த, மணிமாறன், 40, என்பவரது, டாரஸ் லாரி, கடந்த, ஜூலை, 5ல், திருடுபோனது. நேற்று (18ல்), மீண்டும் லாரி திருடுவதற்கு ஆத்தூருக்கு வந்தபோது, கோவை, ஈரோடு பகுதியைச் சேர்ந்த, சுரேஷ், சோமசுந்தரம், சித்ரா, சதீஷ் ஆகிய நான்கு பேரை, ஆத்தூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.


latest tamil newsஇன்று, ஆத்தூர் புறவழிச்சாலையில் ஓட்டல் அருகில், பதிவு எண் இல்லாமல் நின்றிருந்த லாரி குறித்து, போலீசார் விசாரித்துள்ளனர். அப்போது, கோவை, மேட்டுப்பாளையத்தை சேர்ந்த, முகமதுஇஸ்மாயில், 47, பைசூர்ரகுமான், 32, ஆகியோர், திருட்டு லாரியை வாங்கியவர்கள் என்பதும் தெரியவந்ததால், அவர்களை கைது செய்தனர். இவர்களிடம், திருடுபோன லாரியை, போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

5. போதை மாத்திரைகளுடன் இரு இளைஞர்கள் கைது
போத்தனூர் : போத்தனூர் போலீசார் நள்ளிரவு, கருப்பராயன் கோவில் அருகே ரோந்து சென்றனர். சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த காரில் இருந்த இருவரிடம் விசாரணை நடத்தினர்.

போத்தனூர், சாய் அபார்ட்மென்டை சேர்ந்த இம்ரான்கான், 31, என்.பி. இட்டேரியை சேர்ந்த அபுபக்கர், 27 எனவும் தெரிந்தது.மேலும் அவர்கள் ஊசி மூலம் போதை மாத்திரைகளை, பொடியாக்கி செலுத்திக்கொண்டதும் தெரிந்தது. அவர்களிடமிருந்த, 30 மாத்திரைகள், ஊசி, மருந்து, கார் மற்றும் இரு பைக்குகளை பறிமுதல் செய்தனர்.இருவரையும் கைது செய்த போலீசார், வழக்கு பதிவு செய்தனர். இவர்களுக்கு மாத்திரைகளை சப்ளை செய்த என்.பி. இட்டேரியை சேர்ந்த ரியாஸை தேடுகின்றனர்.

இந்தியாவில் குற்றம் :
பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் பதுங்கி இருந்த லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர்.பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு, நம் வீரர்கள் பதிலடி கொடுத்தனர். இதில் பயங்கரவாத அமைப்பின் முக்கிய நபரான இஷ்பார் தார் என்ற அபு அக்ரம் உட்பட இருவர் கொல்லப்பட்டனர்.


latest tamil newsஉலக நடப்பு
ஈராக்கில் குண்டுவெடிப்பு 25 பேர் பலிபாக்தாத் : ஈராக் தலைநகரில் உள்ள சந்தையில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதலில், 25 பேர் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர்.

மேற்காசிய நாடான ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் சந்தை ஒன்றில் பக்ரீத் பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்க நேற்று பொதுமக்கள் அதிக அளவில் கூடினர்.அப்போது அங்கு சக்திவாய்ந்த வெடிகுண்டு ஒன்று வெடித்துச் சிதறியது.இந்த குண்டுவெடிப்பு தாக்குதலில், 25 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பாதுகாப்புப் படையினர் காயமடைந்தோரின் உடல்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் பலரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்த சம்பவம் குறித்த விசாரணையை பாதுகாப்புப் படையினர் துவங்கி உள்ளனர்.


Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
20-ஜூலை-202121:17:07 IST Report Abuse
M  Ramachandran இந்த தமிழக லஞ்ச அதிகாரிகள் மாற மாட்டார்களா?அரசு ஏன் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. மாற்றத்திற்கெல்லாம் பயமுறுத்தல் மற்றும் கட்சி தொண்டர்கள் கூடி உதைப்பர்களே இந்த விஷயத்தில் மெளனமாக இருப்பதேன்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X