பொது செய்தி

இந்தியா

பக்ரீத்துக்கு தளர்வு ஏன்? கேரள அரசுக்கு கிடுக்கி!

Updated : ஜூலை 20, 2021 | Added : ஜூலை 20, 2021 | கருத்துகள் (31)
Share
Advertisement
புதுடில்லி : பக்ரீத் பண்டிகைக்காக கொரோனா கட்டுப்பாடுகளை மூன்று நாட்களுக்கு தளர்த்தியது தொடர்பாக, கேரள அரசு பதில் அளிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. மனு தாக்கல் இங்கு பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, 18 - 20ம் தேதி வரை கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தி, பினராயி விஜயன்

புதுடில்லி : பக்ரீத் பண்டிகைக்காக கொரோனா கட்டுப்பாடுகளை மூன்று நாட்களுக்கு தளர்த்தியது தொடர்பாக, கேரள அரசு பதில் அளிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



latest tamil news



கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. மனு தாக்கல் இங்கு பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, 18 - 20ம் தேதி வரை கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தி, பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். இதன்படி கொரோனா பாதித்த மூன்று மண்டலங்களில் ஜவுளி, நகை, வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட கடைகளை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மிக அதிக பாதிப்பு உள்ள ஒரு பகுதியில், ஒரு நாள் மட்டும் கடைகளை திறக்க அனுமதி தரப்பட்டுள்ளது.

கேரள அரசின் இந்த உத்தரவை எதிர்த்து டில்லியைச் சேர்ந்த பி.கே.டி.நம்பியார் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்; அதில் கூறப்பட்டுள்ளதாவது:நாட்டிலேயே கேரளாவில் தான் கொரோனா பாதிப்பு, 10 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. உத்தர பிரதேசம், டில்லியில் முறையே, 0.02 மற்றும் 0.07 சதவீதம் தான் உள்ளது. அரசியல் ஆதாயத்திற்காக, கட்டுப்பாடுகளை தளர்த்தி மக்களின் வாழ்வுடன் அரசு விளையாடுகிறது. எனவே தளர்வை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.எப்.நாரிமன் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.


latest tamil news



விசாரணை : அப்போது கேரள அரசை உடனடியாக பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட அமர்வு, விசாரணையை இன்று தள்ளி வைத்துள்ளது. இதற்கிடையே, 'கான்வட்' யாத்திரையை இந்த ஆண்டு ரத்து செய்வதாக, உ.பி., அரசு சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதை ஏற்று, வழக்கை முடித்து வைப்பதாக அமர்வு உத்தரவிட்டது.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMAMOORTHI S - COIMBATORE,இந்தியா
20-ஜூலை-202114:23:44 IST Report Abuse
RAMAMOORTHI S Kerala CM has denied permission for Ayyapa Devotees. Now, he has given relaxation for Bakrid during COVID Pandemic. He is a real politician. Lord Ayyappan is watching this.
Rate this:
Cancel
Suppan - Mumbai,இந்தியா
20-ஜூலை-202113:37:48 IST Report Abuse
Suppan பல்லாயிரக் கணக்கான ஆடுகளைக் காவு கொடுத்தால் கொரோனா பூதம் திருப்தி அடைந்து நான்கு நாட்கள் சும்மா இருக்குமாம்
Rate this:
Cancel
Rajah - Colombo,இலங்கை
20-ஜூலை-202112:49:04 IST Report Abuse
Rajah இலங்கையில் பசு வதையை முழுமையாக தடை செய்வதற்கான சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் உறுதிப்பாடு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமைச்சரவையின் அனுமதி கிடைத்த பின்னர், சட்டமூலத்தை வர்த்தமானியில் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதற்கமைவான, எண்ணக்கரு பத்திரத்திற்கு, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமைச்சரவையின் அனுமதி கிடைக்கப்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X