சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புதுச்சேரி டிரைவர் மர்ம சாவு போலீஸ் தீவிர விசாரணை

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
உளுந்துார்பேட்டை-தேசிய நெடுஞ்சாலையில் 2 நாட்களாக லாரியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த டிரைவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரி ஆரோ மேட்டிக் நிறுவனத்தில் இருந்து சோப் ஆயில் ஏற்றியடேங்கர் லாரி கடந்த 17ல் அதிகாலை 2:00 மணியளவில் சேலத்திற்குபுறப்பட்டது. லாரியை புதுச்சேரி, குயவர்பாளையத்தைச் சேர்ந்த கதிரேசன், 45; ஓட்டிச்சென்றார்.லாரி சேலம்

உளுந்துார்பேட்டை-தேசிய நெடுஞ்சாலையில் 2 நாட்களாக லாரியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த டிரைவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரி ஆரோ மேட்டிக் நிறுவனத்தில் இருந்து சோப் ஆயில் ஏற்றியடேங்கர் லாரி கடந்த 17ல் அதிகாலை 2:00 மணியளவில் சேலத்திற்குபுறப்பட்டது. லாரியை புதுச்சேரி, குயவர்பாளையத்தைச் சேர்ந்த கதிரேசன், 45; ஓட்டிச்சென்றார்.லாரி சேலம் சென்றடையாததால் சந்தேகமடைந்த உரிமையாளர், ஜி.பி.ஆர்.எஸ்., கருவி மூலம் பார்த்தார்.டேங்கர் லாரி கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த செங்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையோரம் நின்று கொண்டிருந்தது தெரியவந்தது.ஆரோ மேட்டிக் நிறுவன மேலாளர் ஆனந்தகுமார், 24; நேற்று காலை 11:30 மணிக்கு அங்கு சென்றார்.கதிரேசன், டிரைவர் சீட்டிற்கு பின்னால் உள்ளசீட்டில் படுத்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவலறிந்த போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.ரோந்து போலீஸ் மெத்தனம்செங்குறிச்சி பஸ் நிறுத்தம் அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் இரண்டு நாட்களாக நின்றிருந்த லாரியை நெடுஞ்சாலை ரோந்து போலீசார்கவனிக்காமல் விட்டுள்ளனர். ரோந்து போலீசார் கண்காணித்திருந்தால் அன்றே லாரியை அப்புறப்படுத்தி இருக்கலாம். டிரைவர் இறந்ததும்தெரிந்திருக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X