நாட்டு துப்பாக்கி பறிமுதல் மூன்று பேர் அதிரடி கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நாட்டு துப்பாக்கி பறிமுதல் மூன்று பேர் அதிரடி கைது

Added : ஜூலை 20, 2021
Share
திருக்கோவிலுார்-திருக்கோவிலுார் அருகே நாட்டு துப்பாக்கி வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலுார்பேட்டை, சப் இன்ஸ்பெக்டர் அகிலன் தலைமையில், மணலுார்பேட்டை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முன் நேற்று முன்தினம் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக 2 பைக்குகளில் வந்த மூன்று பேரை நிறுத்தினர். ஆனால், நிறுத்தாமல்

திருக்கோவிலுார்-திருக்கோவிலுார் அருகே நாட்டு துப்பாக்கி வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலுார்பேட்டை, சப் இன்ஸ்பெக்டர் அகிலன் தலைமையில், மணலுார்பேட்டை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முன் நேற்று முன்தினம் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக 2 பைக்குகளில் வந்த மூன்று பேரை நிறுத்தினர். ஆனால், நிறுத்தாமல் சென்றதால், போலீசார் விரட்டிச் சென்று பிடித்து விசாரித்தனர். அதில், எகால் கிராமத்தைச் சேர்ந்த அருளப்பன் மகன் பாபு பிரவீன், 24; விக்டர் மகன் லியோ டேனிஷ், 22; குழந்தைராஜ் மகன் டேவிட், 22; எனவும், நாட்டுத் துப்பாக்கியுடன் இரவு வேட்டைக்குச் சென்றது தெரியவந்தது.மூவர் மீதும் நேற்று, வழக்குப் பதிந்து கைது செய்து, அவர்களிடமிருந்து 2 பைக்குகள், ஒரு நாட்டுத்துப்பாக்கி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X