பொது செய்தி

தமிழ்நாடு

என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்கள் இன்கோசர்வ் சொசைட்டியில் இணைப்பு

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
நெய்வேலி-என்.எல்.சி.,யில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை இன்கோசர்வ் சொசைட்டியில் ( தொழிலக கூட்டுறவு சேவை சங்கம் ) இணைத்து பெயர் பட்டியலை நிர்வாகம் வெளியிட்டதால் மகிழ்ச்சியடைந்தனர்.என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கங்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில் ,

நெய்வேலி-என்.எல்.சி.,யில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை இன்கோசர்வ் சொசைட்டியில் ( தொழிலக கூட்டுறவு சேவை சங்கம் ) இணைத்து பெயர் பட்டியலை நிர்வாகம் வெளியிட்டதால் மகிழ்ச்சியடைந்தனர்.என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கங்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில் , ஒப்பந்த தொழிலாளர்களை இன்கோசர்வ் சொசைட்டியில் இணைக்க முதல்கட்டமாக 3509 பேரின் பெயர் பட்டியலை என்.எல்.சி., இன்கோசர்வ் சங்க நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். நெய்வேலி இல்லத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் என்.எல்.சி., சேர்மன் ராகேஷ்குமார் மற்றும் மனிதவளத்துறை இயக்குனர் விக்ரமன் ஆகியோர் பங்கேற்றனர்.என்.எல்.சி.,மனிதவளத்துறை செயல் இயக்குநர் சதீஷ்பாபு, முதன்மை பொது மேலாளர்கள் தியாகராஜூ, ஜோ ஸ்டீபன் டோமினிக், சத்தியமூர்த்தி பங்கேற்றனர். தொ.மு.ச.,தலைமை நிர்வாகிகள் திருமாவளவன், பாரி, அய்யப்பன்,ஜெரால்டு, அ.தி.மு.க., தொழிற்சங்க தலைமை நிர்வாகிகள் கோவிந்தராஜ், வெற்றிவேல், தேவானந்தன், ஜோதி ஆகியோர் உடனிருந்தனர். இது குறித்து தொ.மு.ச.,பொதுச் செயலாளர் பாரி கூறுகையில்,' கடந்த ஆண்டு ஆக. 7ம் தேதி கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி இன்கோசர்வ் கூட்டுறவு சங்கத்தில் 8000 உறுப்பினர்கள் வரை சேர்க்க ஒப்பந்தம் போடப்பட்டது. இன்கோசர்வ் இயக்குனர்கள் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி,மாநில கூட்டுறவு துறையின் அனுமதி பெறப்பட்டது. இதையடுத்து நிர்வாகம் என்.எல்.சி.,இயக்குநர்கள் குழுவினரின் ஒப்புதலைப் பெற்று பெயர் பட்டியல் வெளியிட்டது. இந்த பட்டியலில் பெயர் விடுபட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் சரியான ஆவணங்களுடன் வரும் ஆக.12ம் தேதிக்குள் நிர்வாகத்தை அணுக வேண்டும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X