சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது

Added : ஜூலை 20, 2021
Share
விருத்தாசலம்-விருத்தாசலத்தில் சிறுமியை திருமணம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தில் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம், விருத்தாசலம் நாச்சியார்பேட்டை பெரியார்வீதியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன், 27; உளுந்துார்பேட்டை பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஓராண்டாக நாச்சியார்பேட்டையில் உறவினர் வீட்டில் தாங்கி இருந்தார். அப்போது தமிழ்ச்செல்வனுக்கும்,

விருத்தாசலம்-விருத்தாசலத்தில் சிறுமியை திருமணம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தில் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம், விருத்தாசலம் நாச்சியார்பேட்டை பெரியார்வீதியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன், 27; உளுந்துார்பேட்டை பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஓராண்டாக நாச்சியார்பேட்டையில் உறவினர் வீட்டில் தாங்கி இருந்தார். அப்போது தமிழ்ச்செல்வனுக்கும், சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதில் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக தமிழ்ச்செல்வன் ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் சிறுமியை கடந்த 3ம் தேதி திருமணம் செய்தார். தகவல் அறிந்த ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்ட அதிகாரி சுகன்யா தலைமையிலான அதிகாரிகள் சிறுமியை மீட்டு கடலுார் காப்பகத்தில் ஒப்படைத்தனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில், அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்தனர். தமிழ்ச்செல்வனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X