பொது செய்தி

தமிழ்நாடு

வீராணம் ஏரியில் தண்ணீர் வரத்து குறைவு

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
மேட்டூர் அணையில் தண்ணீர் குறைந்து, கீழணையில் இருந்து வரும் தண்ணீர் வரத்து குறைவாக இருப்பதால் வீராணம் ஏரி மெல்ல நிரம்புகிறது. கடலுார் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த வீராணம் ஏரி, இந்த ஆண்டு தண்ணீர் முழுவதும் இல்லாமல் வறண்டது. இந்நிலையில் கீழணையில் இருந்து கடந்த 9ம் தேதி மாலை முதல் சென்னை குடிநீருக்காக வீராணம் ஏரிக்கு வடவாற்றில் தண்ணீர் திறக்கப்பட்டன.கீழணையில்

மேட்டூர் அணையில் தண்ணீர் குறைந்து, கீழணையில் இருந்து வரும் தண்ணீர் வரத்து குறைவாக இருப்பதால் வீராணம் ஏரி மெல்ல நிரம்புகிறது. கடலுார் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த வீராணம் ஏரி, இந்த ஆண்டு தண்ணீர் முழுவதும் இல்லாமல் வறண்டது. இந்நிலையில் கீழணையில் இருந்து கடந்த 9ம் தேதி மாலை முதல் சென்னை குடிநீருக்காக வீராணம் ஏரிக்கு வடவாற்றில் தண்ணீர் திறக்கப்பட்டன.கீழணையில் 8.5 அடியாக இருந்த நிலையில் வடவாற்றில் 537 கன அடி தண்ணீர் திறந்து புதிய தண்ணீர் வீராணம் ஏரிக்கு 11ம் தேதி வந்தடைந்தது. கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு 500 கன அடி தண்ணீர் வீதம் திறக்கப்பட்டன. இந்த தண்ணீர் ஏரிக்கு 350 முதல் 400 கன அடியாக இருந்தது. கடந்த ஒரு வாரமாக கல்லணையில் திறக்கும் தண்ணீர் அளவு 200 கன அடியாக குறைக்கப்பட்டது. இதனால் கல்லணையில் இருந்து கீழணைக்கு திறக்கும் தண்ணீர் அளவு குறைத்ததால், ஏரி மெல்ல நிரம்பியது. 47.50 அடி கொண்ட ஏரியின் ஜூரோ பாயிண்ட்டான 39 அடியை நேற்று முன்தினம் எட்டியது. நேற்றைய நிலவரப்படி 1465 மில்லியன் கன அடி கொண்ட வீராணம் ஏரியில் 80.40 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே தேங்கியுள்ளது.கீழணை 6.5 அடியாக உள்ள நிலையில் கடந்த சில நாட்களாக கீழணைக்கு 130 கன அடி தண்ணீர் வரத்தாக உள்ளது. வீராணம் ஏரிக்கு வடவாற்றில் 185 கன அடி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டன. இந்த தண்ணீர் ஏரிக்கு 167 கன அடி அளவில் தான் வரத்து உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைந்து, கீழணைக்கு தண்ணீர் வரத்தும் சரிந்தது. கடந்த ஆண்டு இதே நாளில் (ஜூலை20ம் தேதி) வடவாற்றில் வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து 500 கன அடியாக இருந்த நிலையில் ஏரி 47 அடியை எட்டியிருந்தது. இந்த ஆண்டு 39.84 அடியாக மட்டுமே உள்ளது. மேட்டூர் அணையில் தண்ணீர் குறைவதால் கீழணைக்கும் தண்ணீர் வரத்து குறைந்து வீராணம் ஏரி விரைவாக நிரம்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X