சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மீனவ பெண்கள் 10 மணி நேரம் மறியல்; ஸ்தம்பித்தது கடலூர் நகரம்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
கடலுார்-சுருக்குமடி வலைக்கு அனுமதி கோரி, கடலுாரில் மீனவப் பெண்கள் இரவு 11:30 மணி வரை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் கடலுார் நகரம் ஸ்தம்பித்தது. கலெக்டர் பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டம் நேற்றிரவு கைவிடப்பட்டது.சுருக்குமடி வலை தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடலுாரில் மீனவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2ம் தேதி முதுநகர் மீன்வளத்துறை

கடலுார்-சுருக்குமடி வலைக்கு அனுமதி கோரி, கடலுாரில் மீனவப் பெண்கள் இரவு 11:30 மணி வரை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் கடலுார் நகரம் ஸ்தம்பித்தது. கலெக்டர் பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டம் நேற்றிரவு கைவிடப்பட்டது.சுருக்குமடி வலை தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடலுாரில் மீனவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2ம் தேதி முதுநகர் மீன்வளத்துறை அலுவலகத்தில் 200க்கும் மேற்பட்டோர் திரண்டு, அதிகாரியிடம் மனு கொடுத்தனர். படகுகளில் கறுப்புக் கொடி கட்டி போராட்டம் நடத்தினர். கடந்த 17ம் தேதி தேவனாம்பட்டினம் கடற்கரையில் கடலுார், விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த மீனவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். நேற்று தேவனாம்பட்டினம், ராசாப்பேட்டையில் மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலுாரில் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவப் பெண்கள், கலெக்டரை சந்தித்து மனு அளிக்க சென்றனர். வன்னியர்பாளையம் அருகே தடுப்பு கட்டைகள் அமைத்து போலீசார் தடுத்து நிறுத்தினர். போலீசாருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எஸ்.பி., சக்திகணேசன் பேச்சுவார்த்தை நடத்தி, சில பெண்கள் மட்டும் கலெக்டரை சந்திக்க அனுமதி அளித்தார். அங்கிருந்து புறப்பட்ட மீனவ பெண்கள் பாரதி சாலையில் (கடலுார் - நாகை நெடுஞ்சாலை) நகராட்சி பூங்கா அருகே நான்கு முனை சந்திப்பில் பகல் 1:15 மணியளவில், திடீரென அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், போக்குவரத்து திரும்பி விடப்பட்டது.மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் எஸ்.பி., சக்திகணேசன், கூடுதல் கலெக்டர் ரஞ்சித் சிங், ஆர்.டி.ஒ., அதியமான் கவியரசு, தாசில்தார் பலராமன், டி.எஸ்.பி., கரிகால்பாரி சங்கர் ஆகியோர் ஒவ்வொருவராக பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், எந்த உடன்பாடும் ஏற்படாமல், இரவு போராட்டம் தொடர்ந்தது. ராசாப்பேட்டையில் மறியலில் ஈடுபட்டவர்கள் திடீரென கடலில் இறங்கி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மறியலால் கடலுார் - புதுச்சேரி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதித்தது. மஞ்சக்குப்பம் மைதானம் வழியாக திருப்பி விடப்பட்ட வாகனங்கள் சிறு சிறு தெருக்கள் வழியாக சென்றதால் கடலுார் நகரமே ஸ்தம்பித்தது.இந்நிலையில் நேற்றிரவு 11.00 மணியளவில் கலெக்டர் பாலசுப்ரமணியன் பேச்சுவார்த்தை நடத்தினார். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதனையேற்று மீனவப்பெண்கள் 11.30 மணிக்கு போராட்டத்தை கைவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X