பொது செய்தி

இந்தியா

ஆயிரம் கிலோ மீன்; ஏனாமில் மருமகனுக்கு மாமனார் சீர்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
புதுச்சேரி-ஏனாமில், ஆயிரம் கிலோ மீன், 200 கிலோ இறால், 10 ஆடுகள், ஆயிரம் கிலோ காய்கறிகள் உட்பட சீர் கொடுத்து மருமகனை மாமனார் ஆச்சரியப்படுத்தி உள்ளார்.புதுமண தம்பதிகளுக்கு, ஆடி மாதம் சீர் கொடுத்து கொண்டாடுவது, தமிழர்களின் வழக்கம். அதுபோல, தெலுங்கு பேசும் மக்கள், ஆண்டுதோறும் தெலுங்கு மாதமான 'ஆஷாதம்' விழாவை கொண்டாடுகின்றனர். இது, பொனாலு என்கிற பாரம்பரிய நாட்டுப்புற

புதுச்சேரி-ஏனாமில், ஆயிரம் கிலோ மீன், 200 கிலோ இறால், 10 ஆடுகள், ஆயிரம் கிலோ காய்கறிகள் உட்பட சீர் கொடுத்து மருமகனை மாமனார் ஆச்சரியப்படுத்தி உள்ளார்.

புதுமண தம்பதிகளுக்கு, ஆடி மாதம் சீர் கொடுத்து கொண்டாடுவது, தமிழர்களின் வழக்கம். அதுபோல, தெலுங்கு பேசும் மக்கள், ஆண்டுதோறும் தெலுங்கு மாதமான 'ஆஷாதம்' விழாவை கொண்டாடுகின்றனர். இது, பொனாலு என்கிற பாரம்பரிய நாட்டுப்புற விழாவாக, (ஜூன் - ஜூலை மாதங்களில்), கொண்டாடப் படுகிறது.ஆந்திர மாநிலத்தை ஒட்டியுள்ள, புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியத்திலும் ஆஷாதம் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.இவ்விழாவையொட்டி, ஏனாமை சேர்ந்த பவன்குமார் என்பவருக்கு, ராஜமுந்திரியை சேர்ந்த அவரது மாமனார் பலராம கிருஷ்ணா, வித்தியாசமான சீர் கொடுத்து அசத்தி உள்ளார்.1000 கிலோ மீன், 200 கிலோ இறால், 10 ஆடுகள், 50 கிலோ கோழிகள், ஆயிரம் கிலோ காய்கறிகள், 50 வகை இனிப்புகள், என வண்டி வண்டியாக சீர்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர். இதை, அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.தனது மகள் பிரத்யுஷாவை மருமகன் சிறப்பாக கவனித்துக் கொள்வதால் மகிழ்ச்சி அடைந்து, சீர் செய்ததாக மாமனார் கூறி உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X