பொது செய்தி

இந்தியா

பா.ஜ.,வின் பொய் வாக்குறுதி வைத்திலிங்கம் குற்றச்சாட்டு : வைத்திலிங்கம் எம்.பி., அறிக்கை

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
புதுச்சேரி,-பா.ஜ.,வின் முதல் பொய் வாக்குறுதி வெளி வந்துள்ளது என வைத்திலிங்கம் எம்.பி., தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:புதுச்சேரி சட்டசபை தேர்தலில், மார்ச் மாத இறுதியில் மாநில பா.ஜ., தேர்தல் அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வெளியிட்டார். அதில், புதுச்சேரிக்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டை, 25 சதவீதத்தில் இருந்து 45 சதவீதமாக உயர்த்துவதாக

புதுச்சேரி,-பா.ஜ.,வின் முதல் பொய் வாக்குறுதி வெளி வந்துள்ளது என வைத்திலிங்கம் எம்.பி., தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:புதுச்சேரி சட்டசபை தேர்தலில், மார்ச் மாத இறுதியில் மாநில பா.ஜ., தேர்தல் அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வெளியிட்டார். அதில், புதுச்சேரிக்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டை, 25 சதவீதத்தில் இருந்து 45 சதவீதமாக உயர்த்துவதாக தெரிவித்தனர்.இந்நிலையில் நடைபெற்று வரும் பாராளுமன்ற கூட்டத் தொடரில், புதுச்சேரிக்கான நிதி ஆதாரத்தை மேம்படுத்துவது தொடர்பாக நேற்று நான் கேள்வி எழுப்பினேன்.அதற்கு பதிலளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2021-22க்கு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக கடந்த 2020 அக்டோபர் மாதமே முடிவு செய்யப்பட்டு விட்டது. அதனால், புதுச்சேரிக்கு நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வாய்ப்பில்லை என கூறி உள்ளார்.அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு, இந்த விஷயம், தேர்தல் அறிக்கை வெளியிட்டபோது தெரியாதா? மக்களை ஏமாற்றி ஓட்டு பெற, பொய் வாக்குறுதியை தேர்தல் அறிக்கையில் சேர்த்து கொடுக்கச் செய்துள்ளார்.பா.ஜ.,வின் முதல் பொய் வாக்குறுதி வெளிவந்துள்ளது. இதுபோல் தொடர்ந்து பா.ஜ.,வின் அனைத்து பொய் வாக்குறுதிகளும் வெளி வரும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X