அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஒட்டு கேட்பு குறித்து யூகத்தின் அடிப்படையில் குற்றச்சாட்டு ; சொல்கிறார், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை

Updated : ஜூலை 20, 2021 | Added : ஜூலை 20, 2021 | கருத்துகள் (24)
Share
Advertisement
மதுரை : ''தனிமனித கருத்துரிமைக்கு மதிப்பளிக்கும் பா.ஜ., யாருடைய பேச்சையும் ஒட்டு கேட்காது. ஒட்டு கேட்பு குறித்து யூகத்தின் அடிப்படையில் குற்றம் சாட்டப்படுகிறது,'' எனமதுரையில் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி: மாநிலம் முழுவதும் நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்து வருகிறேன். அனைத்து பகுதிகளுக்கும் செல்வேன். ஊரடங்கு தளர்வு வந்தால்

மதுரை : ''தனிமனித கருத்துரிமைக்கு மதிப்பளிக்கும் பா.ஜ., யாருடைய பேச்சையும் ஒட்டு கேட்காது. ஒட்டு கேட்பு குறித்து யூகத்தின் அடிப்படையில் குற்றம் சாட்டப்படுகிறது,'' எனமதுரையில் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.latest tamil newsஅவர் அளித்த பேட்டி: மாநிலம் முழுவதும் நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்து வருகிறேன். அனைத்து பகுதிகளுக்கும் செல்வேன். ஊரடங்கு தளர்வு வந்தால் உள்ளரங்கு கூட்டங்கள் நடத்தவுள்ளோம். பா.ஜ., சித்தாந்த அடிப்படையிலான கட்சி. தி.மு.க., ஆட்சியின் தவறுகளை தொடர்ந்து சுட்டிகாட்டுவோம். மக்கள் எங்கள் பக்கம் வருவர். பிரதமர் மோடியின் பல்வேறு நலத்திட்டங்களால் மாநிலத்தில் மூன்றரை கோடி மக்கள் பயன்பெற்றுள்ளனர்.


latest tamil newsபெகாசஸ் மூலம் அரசியல் கட்சி தலைவர்களின் அலைபேசி பேச்சை ஒட்டு கேட்பதாக மத்திய அரசு மீதான குற்றச்சாட்டிற்கு மத்தியமைச்சர் பதிலளித்துள்ளார். வாட்ஸ் ஆப் நிறுவனம்பெகாசஸ் மூலம் உரையாடலின் போது கிராஸ் பண்ண முடியாது என உச்சநீதிமன்றத்தில்தாக்கலான பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெகாசஸ் சாப்ட்வேரில் நம்பர் இருப்பதால் ஒட்டு கேட்கப்பட்டது என்பது உண்மையல்ல. அரசியல் காரணங்களுக்காக ஒரு குறிப்பிட்ட ஊடகம் வெளியிட்ட செய்தி தான் ஒட்டு கேட்பு விவகாரம்.

வேல் யாத்திரை மக்களின் வேள்விக்காக நடந்தது. மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்த தான் பா.ஜ., யாத்திரைகள். தி.மு.க.,விற்கு பா.ஜ., தான் எதிரி என்ற அடிப்படையில் தமிழக அரசியல் களம் நகர்கிறது. நாங்கள் திராவிட சித்தாந்தம் பேச விரும்பவில்லை. ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்பது போல தி.மு.க.,வில் தற்போது மூன்று முதல்வர்கள் உள்ளது தான் அதன் சித்தாந்தம். தி.மு.க., தேர்தலில் பொய் சித்தாந்தத்தை கூறி தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசி வெற்றி பெற்றுள்ளது, என்றார். மாநில, மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.


latest tamil newsதமிழகத்திற்கு ஆதரவுசேலத்தில் நேற்று ஆடிட்டர் ரமேஷ் நினைவு தின நிகழ்ச்சியில் அஞ்சலி செலுத்திய அண்ணாமலை கூறியதாவது: ரமேஷ் கொலை வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க மத்திய சட்ட அமைச்சரிடம் வலியுறுத்துவோம். பா.ஜ. ஆட்சியில் கலவரம் குண்டுவெடிப்பு மத மோதல் குறைந்துள்ளது. மேகதாது விவகாரத்தில் பக்கத்து மாநிலத்தில் பா.ஜ. ஆட்சி இருந்தாலும் கூட விவசாயிகளுக்காக தமிழக பா.ஜ. எதிர்ப்பை தெரிவித்துள்ளோம்.

பெட்ரோல் டீசல் விலையில் ரூ.5 குறைப்பேன் என தி.மு.க. அரசு அரசு கூறியது. இன்னும்செய்யவில்லை. விலையேற்றத்தில் மேலும் 1.20 ரூபாய் தமிழக அரசின் லாபம் அதிகரித்துஉள்ளது. நியாயமாக 6.20 ரூபாய் குறைக்க வேண்டும். நிதியமைச்சரை கேட்டால் காலம் நேரம் குறித்து பேசுகிறார். இவ்வாறு கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Priyan Vadanad - Madurai,இந்தியா
20-ஜூலை-202115:27:33 IST Report Abuse
Priyan Vadanad இந்த ஆட்சியில்தான் இந்து கோவில்களின் சொத்து மீட்பு செயல்பாடு சிறப்புடன் செயல்படுகிறது என்பதையும் தலைவர் எடுத்து சொல்லியிருக்கலாம். முருகனின் வேல் யாத்திரையைவிட இதுதான் மக்கள் மனதில் நிலைக்கும். உண்மையை மறைக்க முடியாது.
Rate this:
Cancel
Namasivayam Ganesan - MADURAI,இந்தியா
20-ஜூலை-202113:40:22 IST Report Abuse
Namasivayam Ganesan பிஜேபி யின் அழிவு ஆரம்பமாகிறது.
Rate this:
C G Chinnaswamy - Singapore,சிங்கப்பூர்
20-ஜூலை-202115:38:17 IST Report Abuse
C G Chinnaswamyஒரு நன்கு படித்த, நேர்மையான போலீஸ் அதிகாரியாயிருந்த ஒருவர் மாநிலத்தலைவரானது உமக்குப் பிடிக்காது போலும். மேலும் வாரிசு அரசியல் ஊழல் அரசியல் செய்பவர்களுக்குத்தான் ஜால்ரா போட்டு அனுபவிக்கும் கோமாளிகள்....
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
20-ஜூலை-202112:46:28 IST Report Abuse
Kasimani Baskaran "In India, at least 40 journalists from nearly every major media outlet in the country were ed as potential targets between 2017-2021. Forensic tests revealed the phones of Siddharth Varadarajan and MK Venu, co-founders of independent online outlet The Wire, were infected with Pegasus spyware as recently as June 2021." - அம்னெஸ்டி இணையத்தளத்தில் பெகாசஸ் பற்றிய குறிப்பில் - காங்கிரஸ் சொல்லும் அரசியல்வாதிகள், நீதிபதிகள் என்ற கதையே இல்லை. ஆப்பிள் வெளியிட்ட செய்திக்குறிப்பில் அம்னெஸ்டியில் ஆய்வுகளை தொழில்நுணுக்க ரீதியாக முழுவதும் சரி என்று சொல்லவில்லை.
Rate this:
20-ஜூலை-202114:22:29 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம்ஒட்டு கேட்பது/MLA விலைக்கு வாங்குவது/500 கோடி தேர்தல் செலவு இது தான் உங்கள் நேர்மை கட்சியின் செயல்பாடு...
Rate this:
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
20-ஜூலை-202115:49:46 IST Report Abuse
 N.Purushothamanஎப்படி முன்னாள் நிதி அமைச்சர் இன்னொரு அமைச்சரின் அலுவலகத்தையே ஒட்டு கேட்டதை போலவா ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X