எம்.எல்.ஏ., தலைமையில் பேராட்டம்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
புதுச்சேரி,-மின்தடை மற்றும் கட்டண உயர்வை கண்டித்து, நேரு எம்.எல்.ஏ., மின் துறை அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டார்.கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 3 மாதங்களாக மின் கட்டணத்திற்கான ரீடிங் எடுக்கப்படவில்லை. தற்போது, மின் நுகர்வு கணக்கிடப்பட்டு, ரசீது வழங்கி வருகின்றனர்.மின் கட்டணம் அதிகம் வசூலிப்பதாகவும், உருளையன்பேட்டை தொகுதி யில் அடிக்கடி ஏற்படும் மின் தடையை

புதுச்சேரி,-மின்தடை மற்றும் கட்டண உயர்வை கண்டித்து, நேரு எம்.எல்.ஏ., மின் துறை அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டார்.கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 3 மாதங்களாக மின் கட்டணத்திற்கான ரீடிங் எடுக்கப்படவில்லை. தற்போது, மின் நுகர்வு கணக்கிடப்பட்டு, ரசீது வழங்கி வருகின்றனர்.மின் கட்டணம் அதிகம் வசூலிப்பதாகவும், உருளையன்பேட்டை தொகுதி யில் அடிக்கடி ஏற்படும் மின் தடையை கண்டித் தும், நேற்று முற்றுகை போராட்டம் நடத்தினர்.மனிதநேய மக்கள் இயக்கம் சார்பில், திப்ராயப்பேட்டை மின் துறை தலைமை அலுவலகத்தில் நடந்த போராட்டத்திற்கு நேரு எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார்.ஊரடங்கு காலத்தில் மூடி கிடந்த கடைகளுக்கு, சராசரி கட்டணம், நிரந்தர சேவை கட்டணம், தாமத கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தப் பட்டது.இது தொடர்பாக நேரு எம்.எல்.ஏ., மின் துறை கண்காணிப்பு பொறியாளரை சந்தித்து மனு அளித்தார். அதைத் தொடர்ந்து போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X