பொது செய்தி

இந்தியா

கொரோனா தொற்று பரவல் 0.80 சதவீதமாக குறைந்தது

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
புதுச்சேரி,-புதுச்சேரியில் கொரேனா தொற்று பரவல் ஒரு சதவீதத்திற்கு குறைவாக உள்ளது.புதுச்சேரி மாநிலம் முழுதும் நேற்று முன்தினம் 5,243 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 42 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப் பட்டது.இதனால், கொரோனா தொற்றால் பாதித்தோர் எண்ணக்கை ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 745 ஆக உயர்ந்தது. அவர்களில் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 926 பேர் குணமடைந்தனர். 183 பேர்

புதுச்சேரி,-புதுச்சேரியில் கொரேனா தொற்று பரவல் ஒரு சதவீதத்திற்கு குறைவாக உள்ளது.புதுச்சேரி மாநிலம் முழுதும் நேற்று முன்தினம் 5,243 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 42 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப் பட்டது.இதனால், கொரோனா தொற்றால் பாதித்தோர் எண்ணக்கை ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 745 ஆக உயர்ந்தது. அவர்களில் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 926 பேர் குணமடைந்தனர். 183 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 858 பேர் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.கொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை 1,776 ஆக உள்ளது. மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டதால், தொற்று பரவல் 0.80 சதவீதமாக குறைந்துள்ளது. கொரோனா இறப்பு 1.48 சதவீதமாக குறைந்தது. தொற்றில் இருந்து குணமடைவோர் சதவீதம் 97.65 ஆக உயர்ந்துள்ளது.நேற்று முன்தினம், சுகாதாரத் துறை ஊழியர்கள் இருவர் உள்ளிட்ட 1,180 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X