இந்தியா

ஆலோசனை: அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க... சுகாதாரத் துறை முடிவெடுக்கும் என அறிவிப்பு

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
புதுச்சேரி-அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு சேர்க்கையில்,10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து, கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.புதுச்சேரி மாநிலத்திற்கு தனி கல்வி வாரியம் கிடையாது. அதனால், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களுக்கு தமிழக அரசின் பாடத் திட்டத்தை பின்பற்றப்பட்டு வருகிறது.பள்ளிகள்

புதுச்சேரி-அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு சேர்க்கையில்,10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து, கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

புதுச்சேரி மாநிலத்திற்கு தனி கல்வி வாரியம் கிடையாது. அதனால், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களுக்கு தமிழக அரசின் பாடத் திட்டத்தை பின்பற்றப்பட்டு வருகிறது.பள்ளிகள் மூடல்கடந்தாண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள், கடந்த அக்டோபர் மாதம் திறக்கப்பட்டது.பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்விற்கான செய்முறை தேர்வுகள் முடிந்த நிலையில், கொரோனா இரண்டாம் அலை பரவத் துவங்கியது. அதனால், பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டன.ஆல் பாஸ்பொதுத்தேர்வு நடத்த முடியாத காரணத்தினால், அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது.மேலும், வல்லுனர் குழு பரிந்துரைப்படி மதிப்பெண் வழங்கப்படும் என கூறியது.அதன்படி, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 பொதுத் தேர்வு மதிப்பெண், பிளஸ் 2 செய்முறை தேர்வு, அக மதிப்பெண் அடிப்படையில், மதிப்பெண் வழங்கப்படும் என தெரிவித்தது.இந்நிலையில், பிளஸ் 2 மாணவர்களின் மதிப்பெண் விபரத்தை, தமிழக அரசு நேற்று வெளியிட்டது.தேர்வு முடிவு அமைச்சர் வெளியீடுபுதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்திய மாணவர்களுக்கான தேர்வு முடிவை கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:கொரோனா தொற்று காரணமாக கல்வி நிலையங்கள் செயல்படவில்லை. அதனால், மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத முடியாத சூழல் நிலவியது.பிளஸ் 2 மாணவர்கள் உயர்கல்வியை தொடர ஏதுவாக, மதிப்பெண் வழங்கி, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.இதில், 10ம் வகுப்பு மதிப்பெண்ணில் 50 சதவீதம், பிளஸ் 1 மதிப்பெண்ணில் 20 சதவீதம் கணக்கிடப்பட்டுள்ளது. அத்துடன், பிளஸ் 2 செய்முறை தேர்வு, மற்றும் அக மதிப்பெண் 30 சதவீதம் சேர்க்கப் பட்டுள்ளது.புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்ற 14 ஆயிரத்து 674 மாணவர்களுக்கு மதிப்பெண் வெளியிடப் பட்டுள்ளது.இவர்களில், 7,790 பேர் மாணவிகள் ஆவர். இம்முறை மதிப்பெண் தசம அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.இது, மாணவர்களின் மேற்படிப்பு சேர்க்கைக்கு உதவியாக இருக்கும்.ஆய்வு கூட்டம்கல்வித் துறையின் செயல்பாடுகளை அறிய, இன்று (நேற்று) அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்த உள்ளேன்.அதில், மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும்.கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில், ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்களில் 25 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதை கண்காணிக்கப்படுகிறதா எனவும் ஆய்வு செய்ய உள்ளேன்.தனி கல்வி வாரியம்ஏற்கனவே இருந்த அரசுகள், புதுச்சேரி மாநிலத்திற்கு தனி கல்வி வாரியம் அறிவித்தன. அவை தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது.ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு, பணி நிரந்தரம், காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது குறித்தும் ஆய்வு செய்யப்படும். அரசு பள்ளிகளின் நிலை குறித்து ஆய்வு செய்ய உள்ளேன்.முதல்வர் அறிவித்ததை மீறி அதிக கட்டணம் வசூலிக்கும் கல்வி நிறுவனங்கள் மீது, கல்வித் துறை நடவடிக்கை எடுக்கும்.இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.

பேட்டியின்போது கல்வித்துறை செயலர் அசோக்குமார், இயக்குநர் ருத்ரகவுடு மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.சுகாதாரத் துறையிடம் ஒப்படைப்புமருத்துவப் படிப்பு சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து, அதிகாரிகளுடன் அமைச்சர் நமச்சிவாயம் நேற்று ஆலோசனை நடத்தினார்.பின்னர் அவர் கூறுகையில், 'இட ஒதுக்கீடு அளிப்பது தொடர்பான சட்ட வரைவுகளை, கடந்தாண்டு சுகாதாரத் துறை தயாரித்து. இந்த கோப்பு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதனால், அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு குறித்து சுகாதாரத் துறையே முடிவெடுக்கும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X