மகளிர் சுய உதவிக் குழுவிற்கு ரூ.29 லட்சம் நிதியுதவி வழங்கல்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மகளிர் சுய உதவிக் குழுவிற்கு ரூ.29 லட்சம் நிதியுதவி வழங்கல்

Added : ஜூலை 20, 2021
Share
புதுச்சேரி,-மணவெளி தொகுதியை சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு, முதலீட்டு நிதியாக ரூ.29 லட்சம் வழங்கப் பட்டது.இதற்கான நிகழ்ச்சி, சபாநாயகர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம், சுய உதவிக்குழு கூட்டமைப்பிற்கு, 29 லட்சம் ரூபாய் நிதியுதவி காசோலையை சபாநாயகர் செல்வம் வழங்கினார்.இதன் மூலம், தவளக்குப்பம், பூரணாங்குப்பம்,

புதுச்சேரி,-மணவெளி தொகுதியை சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு, முதலீட்டு நிதியாக ரூ.29 லட்சம் வழங்கப் பட்டது.இதற்கான நிகழ்ச்சி, சபாநாயகர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம், சுய உதவிக்குழு கூட்டமைப்பிற்கு, 29 லட்சம் ரூபாய் நிதியுதவி காசோலையை சபாநாயகர் செல்வம் வழங்கினார்.இதன் மூலம், தவளக்குப்பம், பூரணாங்குப்பம், ஆண்டியார்பாளையம், டி.என்.பாளையம், அபிஷேகப்பாக்கம், நல்லவாடு மற்றும் மணவெளி ஆகிய பகுதிகளை சேர்ந்த சுய உதவிக் குழுவினர் பயன் பெற்றனர்.வட்டார வளர்ச்சி அதிகாரி சக்திவேல், இணை வட்டார வளர்ச்சி அதிகாரி கதிர்வேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X