பொது செய்தி

இந்தியா

16 வாடகை கார்களை அடமானம் வைத்து மோசடி: அரசு ஊழியர் உட்பட இருவருக்கு வலை

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
பாகூர்,-ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 16 வாடகை கார்களை அடமானம் வைத்து மோசடி செய்த அரசு ஊழியர் உட்பட இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.புதுச்சேரி, அரியாங்குப்பம் ஆர்.கே .நகர் காமராஜர் தெருவை சேர்ந்தவர் தினேஷ், அவரது நண்பர் குறிஞ்சி நகரை சேர்ந்த ரமேஷ்.இருவரும், கார்களை மாத வாடகைக்கு எடுத்து, அதனை தமிழக பகுதியில் அடமானம் வைத்து மோசடி செய்துள்ளனர்.இது தொடர்பாக, இருவர் மீதும்

பாகூர்,-ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 16 வாடகை கார்களை அடமானம் வைத்து மோசடி செய்த அரசு ஊழியர் உட்பட இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி, அரியாங்குப்பம் ஆர்.கே .நகர் காமராஜர் தெருவை சேர்ந்தவர் தினேஷ், அவரது நண்பர் குறிஞ்சி நகரை சேர்ந்த ரமேஷ்.இருவரும், கார்களை மாத வாடகைக்கு எடுத்து, அதனை தமிழக பகுதியில் அடமானம் வைத்து மோசடி செய்துள்ளனர்.இது தொடர்பாக, இருவர் மீதும் கிருமாம்பாக்கம், அரியாங்குப்பம், கோரிமேடு போலீஸ் நிலையங்களில் வழக்கு பதிந்து, விசாரணை நடந்து வருகிறது.இந்நிலையில், இவர்கள் இருவர் மீது மேலும் ஒரு மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது.திருவண்டார்கோயில் சின்னபேட் பகுதியை சேர்ந்த சிவபெருமான், 35; கிருமாம்பாக்கம் போலீசில் நேற்று முன்தினம் அளித்துள்ள புகார் மனு:எனக்கு சொந்தமான இனோவா காரை, தினேஷ், ரமேஷ் இருவரும், கடந்த ஆண்டு ஜூன் 29ம் தேதி, மாத வாடகைக்கு பெற்றுச் சென்றனர்.அதேபோல, நெட்டப்பாக்கம் பழனிசாமிக்கு சொந்தமான மாருதி சுசூகி சுவிப்ட் காரையும் வாடகைக்கு எடுத்துச் சென்றனர். அந்த கார்களை அடமானம் வைத்து மோசடி செய்துள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.கிருமாம்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் வழக்கு பதிந்தார். முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாவது:ரமேஷ், கடலுார் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர், நண்பர் தினேஷுடன் சேர்ந்து, இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார்.கொரோனா சேவை பணிக்கு கார் வாடகைக்கு தேவை என கூறி, இதுவரை 16 கார்களை வாடகைக்கு எடுத்துள்ளனர்.அப்போது, ரமேஷின் செவிலியர் அடையாள அட்டையை, கார் உரிமையாளர்களிடம் காண்பித்து, நம்ப வைத்து உள்ளனர்.பின்னர், அந்த கார்களை, அடமானம் வைத்து மோசடி செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள இருவரையும் கைது செய்ய, போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள, 16 கார்களை வாடகைக்கு எடுத்து, அவற்றை அடமானம் வைத்து மோசடி செய்துள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X