பெயிண்டர் கொலை வழக்கில் டிரைவர் கைது

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
வில்லியனுார்,-வில்லியனுார் அருகே, கட்டையால் அடித்து பெயிண்டரை கொலை செய்த டாடா ஏஸ் டிரைவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.வில்லியனுார் அடுத்த அரும்பார்த்தபுரம் பாரதி வீதியைச் சேர்ந்தவர் பூபதி, 50; பெயிண்டர்.இவரது நண்பர், அரும்பார்த்தபுரம் ஒத்தவாடை பகுதியை சேர்ந்த பிரபு,35; டாடா ஏஸ் டிரைவர்.நேற்று முன்தினம் மதியம் 2:00 மணி அளவில் பூபதி, பிரபு இடையே தகராறு ஏற்பட்டது. இதில்,

வில்லியனுார்,-வில்லியனுார் அருகே, கட்டையால் அடித்து பெயிண்டரை கொலை செய்த டாடா ஏஸ் டிரைவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.வில்லியனுார் அடுத்த அரும்பார்த்தபுரம் பாரதி வீதியைச் சேர்ந்தவர் பூபதி, 50; பெயிண்டர்.இவரது நண்பர், அரும்பார்த்தபுரம் ஒத்தவாடை பகுதியை சேர்ந்த பிரபு,35; டாடா ஏஸ் டிரைவர்.நேற்று முன்தினம் மதியம் 2:00 மணி அளவில் பூபதி, பிரபு இடையே தகராறு ஏற்பட்டது. இதில், கட்டையால் தாக்கப்பட்டதில் பூபதி இறந்தார்.இது குறித்து வில்லியனுார் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் பிரபு வழக்கு பதிந்து விசாரித்தனர். போலீசாரிடம் பிரபு அளித்துள்ள வாக்குமூலம்:வி. மணவெளி தண்டுகரை வீதியில் உள்ள காலி மனையில் இருவரும் மது குடித்துக் கொண்டிருந்தோம். அப்போது, மது குறைவாக கொடுத்துவிட்டதாக, என்னை, பூபதி ஆபாசமாக திட்டினார். இதனால் கோபமடைந்த நான், பூபதியை தாக்க முயன்றேன். அவர், தனது சைக்கிளை எடுத்துக்கொண்டு தப்பிச் செல்ல முயன்றார்.அங்கு கிடந்த சவுக்கு கட்டையை எடுத்து பூபதியின் தலையில் மூன்று முறை அடித்தேன். அவர் மயக்கம் அடைந்து, சைக்கிள் மீது விழுந்தார். நான் அங்கிருந்து தப்பிச் சென்றேன்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.பிரபுவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X