பொது செய்தி

இந்தியா

கஞ்சா விற்பனையை ஒழிக்க : போலீசாருக்கு ஏ.டி.ஜி.பி., அதிரடி உத்தரவு

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
புதுச்சேரி,-புதுச்சேரியில் கஞ்சா விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க, போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 'ஆப்பரேஷன் விடியல்' என்ற பெயரில், இதற்கான பணியை தீவிரப்படுத்த, ஏ.டி.ஜி.பி., அறிவுறுத்தி உள்ளார்.போதைப் பொருளான கஞ்சா, புதுச்சேரி முழுதும் சர்வ சாதாரணமாக கிடைக்கிறது. பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வேலையின்றி ஊர் சுற்றும் வாலிபர்களை குறி வைத்து, கஞ்சா விற்பனை

புதுச்சேரி,-புதுச்சேரியில் கஞ்சா விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க, போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

'ஆப்பரேஷன் விடியல்' என்ற பெயரில், இதற்கான பணியை தீவிரப்படுத்த, ஏ.டி.ஜி.பி., அறிவுறுத்தி உள்ளார்.போதைப் பொருளான கஞ்சா, புதுச்சேரி முழுதும் சர்வ சாதாரணமாக கிடைக்கிறது. பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வேலையின்றி ஊர் சுற்றும் வாலிபர்களை குறி வைத்து, கஞ்சா விற்பனை நடக்கிறது.குறைந்த முதலீடு செய்து, அதிக லாபம் பார்க்கும் தொழிலாக கஞ்சா விற்பனை மாறிவிட்டது. ரவுடிகள், உள்ளூர் போலீசாரை 'கவனித்து', தடையின்றி கஞ்சா விற்பனை செய்து வருகின்றனர்.நகரப் பகுதியில் நடந்து வந்த கஞ்சா விற்பனை, தற்போது கிராமப்புறங்களிலும் பரவி உள்ளது. குறிப்பாக அரியாங்குப்பம், வில்லியனுார், திருக்கனுார், பாகூர் சுற்று வட்டார பகுதிகளிலும் கஞ்சா கிடைக்கிறது.சில நாட்களுக்கு முன்பு, போலீசாருடன் ஆலோசனை நடத்திய உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், கஞ்சா விற்பனையை ஒழிக்குமாறு உத்தரவிட்டார்.இந்நிலையில், போலீஸ் ஏ.டி.ஜி.பி. ஆனந்தமோகன், சட்டம் -ஒழுங்கு மற்றும் குற்றப் புலனாய்வு சீனியர் எஸ்.பி.,க்களுடன் நேற்று காலை ஆலோசனை நடத்தினார்.அப்போது, புதுச்சேரியில் 6 மாத காலத்திற்குள் கஞ்சா விற்பனை அறவே ஒழிக்கப்பட வேண்டும். 'ஆப்பரேஷன் விடியல்' என்ற பெயரில், கஞ்சா விற்பனையை ஒழிக்கும் பணியை தீவிரப்படுத்த உத்தரவிட்டார்.கஞ்சா விற்போரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். சிறுவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்தால், 5 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் வகையில், வழக்கு பதிவு செய்ய வேண் டும் என அறிவுறுத்தினார்.தொடர்ந்து, மாலையில் சட்டம் - ஒழுங்கு போலீஸ் ஆலோசனை கூட்டம் நடந்தது. சீனியர் எஸ்.பி., பிரதிக் ஷா கோத்ரா தலைமை தாங்கினார். எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.இதில், 'ஆப்பரேஷன் விடியல்' செயல்படுத்தும் முறை, கஞ்சா இல்லாத மாநிலமாக மாற்ற செய்ய வேண்டிய பணிகள் குறித்து விளக்கப்பட்டது.கஞ்சா விற்பனை செய்யும் உள்ளூர் ரவுடிகளை கைது செய்து சிறைக்கு அனுப்ப வேண்டும். புதுச்சேரிக்கு கஞ்சா கொண்டுவரப்படும் வழிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.மாடி தோட்டத்தில் கஞ்சா சாகுபடி?அரியாங்குப்பம் ஆற்றங்கரை ஓரமாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, இரண்டு வாலிபர்கள் கஞ்சா செடி பயிரிட்டனர். அதை போலீசார் கண்டுபிடித்து, அழித்தனர்.தற்போது, அரியாங்குப்பம், மணவெளி பகுதியில் சிலர், மாடி தோட்டத்தில் கஞ்சா பயிரிட்டு, விற்பனை செய்து வருவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதையடுத்து, அவற்றை உடனடியாக கண்டறிய வேண்டும் எனவும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X