கொலை மிரட்டல் 2 பேர் மீது வழக்கு| Dinamalar

கொலை மிரட்டல் 2 பேர் மீது வழக்கு

Added : ஜூலை 20, 2021
Share
புதுச்சேரி,-வீடு புகுந்து தையல் மிஷினை பறித்துக் கொண்டு, கொலை மிரட்டல் விடுத்த பெண் உள்ளிட்ட இருவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.புதுச்சேரி காந்தி நகர், வழுதாவூர் சாலையை சேர்ந்தவர் ராமன் மனைவி ராஜி, 40; தையல் கடை நடத்தி வந்தார்.காந்தி நகரை சேர்ந்த அமினா பேகத்திடம், ரூ. 30 ஆயிரம் கடன் வாங்கினார். கடன் தொகைக்காக ராஜி, வெற்று காசோலை கொடுத்துள்ளார். 4 மாதம்

புதுச்சேரி,-வீடு புகுந்து தையல் மிஷினை பறித்துக் கொண்டு, கொலை மிரட்டல் விடுத்த பெண் உள்ளிட்ட இருவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.புதுச்சேரி காந்தி நகர், வழுதாவூர் சாலையை சேர்ந்தவர் ராமன் மனைவி ராஜி, 40; தையல் கடை நடத்தி வந்தார்.காந்தி நகரை சேர்ந்த அமினா பேகத்திடம், ரூ. 30 ஆயிரம் கடன் வாங்கினார். கடன் தொகைக்காக ராஜி, வெற்று காசோலை கொடுத்துள்ளார். 4 மாதம் வட்டி தொகை கொடுத்து வந்தார். வெற்று காசோலை மூலம், அமினா பேகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால், வட்டி கொடுப்பதை ராஜி நிறுத்தி விட்டார்.கடந்த மே 15ம் தேதி, ராஜி வீட்டிற்கு வந்த அமினாபேகம், தையல் மிஷினை எடுத்துக்கொண்டு, மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில், அமீனாபேகம் உள்ளிட்ட இருவர் மீது, கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X