பொது செய்தி

இந்தியா

தனி கல்வி வாரியம் தேவையா? அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
புதுச்சேரி,-''மாநிலத்திற்கு தனி கல்வி வாரியம் தேவையா என முதல்வருடன் கலந்து ஆலோசித்து, நடவடிக்கை எடுக்கப்படும்'' என கல்வித் துறை அமைச்சர்நமச்சிவாயம் கூறினார்.புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களை கொண்டது, புதுச்சேரி யூனியன் பிரதேசம். இதற்கென தனி கல்வி வாரியம் இல்லை.புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்கள் தமிழ்நாடு கல்வி வாரிய

புதுச்சேரி,-''மாநிலத்திற்கு தனி கல்வி வாரியம் தேவையா என முதல்வருடன் கலந்து ஆலோசித்து, நடவடிக்கை எடுக்கப்படும்'' என கல்வித் துறை அமைச்சர்நமச்சிவாயம் கூறினார்.புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களை கொண்டது, புதுச்சேரி யூனியன் பிரதேசம். இதற்கென தனி கல்வி வாரியம் இல்லை.புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்கள் தமிழ்நாடு கல்வி வாரிய பாடத்திட்டத்தை பின்பற்றுகின்றன. மாகி பிராந்தியம், கேரள மாநில பாடத்திட்டத்தையும், ஏனாம் பிராந்தியம் ஆந்திரா மாநில கல்வி வாரியத்தையும்பின்பற்றுகின்றன.வெவ்வேறான பாடத்திட்டங்களால் மாணவர்கள் குழப்பம் அடைந்து வருகின்றனர்.இந்நிலையில், தனி கல்வி வாரியம் அமைப்பது உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து, உயர்கல்வித் துறை அலுவலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது.கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். கல்வித் துறை செயலர் அசோக்குமார், உயர் கல்வித் துறை இயக்குனர் ருத்ரகவுடு, ரூசா திட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:மாநிலத்திற்கு தனி கல்வி வாரியம் ஏற்படுத்துதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.தனி கல்வி வாரியம் ஏற்படுத்தினாலும், பள்ளிகள் சி.பி.எஸ்.இ., பக்கம் செல்கின்றன.மேலும், தனி கல்வி வாரியம் ஏற்படுத்தினால் செலவு அதிகமாகும். தற்போதைய சூழலில் மாநிலத்திற்கு தனி கல்வி வாரியம் தேவையா என்ற கேள்வி எழுகிறது என கருத்தை முன் வைத்தனர்.இது தொடர்பாக முதல்வர் ரங்கசாமியுடன் ஆலோசித்து, அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தனியார் கல்லுாரிகள் அதிக கட்டணம் வசூலித்தால் சட்டப்படி கடும் நடவடிக்கைஎடுக்கப்படும். கல்லுாரிகளை திறப்பதற்கு முன், மாணவர்கள், ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போட முடிவு செய்துள்ளோம்.சுகாதாரத் துறையுடன் ஆலோசித்து, தடுப்பூசி போடும் தேதி முடிவு செய்யப்படும். அதன் பிறகு கல்லுாரி திறப்பு குறித்து முதல்வருடன் கலந்து பேசி, முடிவுசெய்யப்படும்.இவ்வாறு அவர்கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X