75 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படும்: கவர்னர் தமிழிசை தகவல்| Dinamalar

இந்தியா

75 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படும்: கவர்னர் தமிழிசை தகவல்

Added : ஜூலை 20, 2021
Share
புதுச்சேரி,-'புதுச்சேரி மாநிலம் முழுதும் 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளது' என, கவர்னர் தமிழிசை பேசினார்.புதுச்சேரி அரசின் 'நீரும் ஊரும்' திட்டத்தின் கீழ், ஏம்பலம் தொகுதி நந்தமேடு புதுக்குப்பம் கிராமத்தில் குளம் தூர்வாரும் பணி நேற்று துவங்கியது.இப்பணி, ஈரம் பவுண்டேஷன் சார்பில், மேற்கொள்ளப் படுகிறது. துவக்க நிகழ்ச்சியில், லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., தலைமை
 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படும்: கவர்னர் தமிழிசை தகவல்

புதுச்சேரி,-'புதுச்சேரி மாநிலம் முழுதும் 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளது' என, கவர்னர் தமிழிசை பேசினார்.

புதுச்சேரி அரசின் 'நீரும் ஊரும்' திட்டத்தின் கீழ், ஏம்பலம் தொகுதி நந்தமேடு புதுக்குப்பம் கிராமத்தில் குளம் தூர்வாரும் பணி நேற்று துவங்கியது.இப்பணி, ஈரம் பவுண்டேஷன் சார்பில், மேற்கொள்ளப் படுகிறது. துவக்க நிகழ்ச்சியில், லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். சபாநாயகர் செல்வம் முன்னிலை வகித்தார்.கவர்னர் தமிழிசை, பணியை துவக்கி வைத்து பேசியதாவது;நமது முன்னோர்கள் நீர்நிலைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதனை பராமரித்து வந்தனர். நாம் அவற்றை பாதுகாக்காமல் அழித்து விட்டு, தண்ணீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது.தண்ணீரை வீணடிக்காமல் நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டும். ஏரி, குளங்கள் துார் வார நடவடிக்கை எடுக்கப்படும்.

மரக்கன்றுகள் நடவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.நீர்நிலைகளை முறையாக பராமரிக்காவிட்டால், யானைக்கால், மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் ஏற்படும். நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி மாநிலம் முழுவதும் 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டம் உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.சுகாதாரத் துறை செயலர் அருண், சப் கலெக்டர் கிரிசங்கர், நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் மனோகர், சினிமா பாடலாசிரியர் சினேகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X