பொது செய்தி

தமிழ்நாடு

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
விழுப்புரம்,-விழுப்புரம் அருகே அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடத்திலிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது.விழுப்புரம் அடுத்த கல்பட்டு கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முத்தாலவாழியம்மன் கோவிலுக்குச் சொந்தமாக சிறுவாக்கூர் கிராம எல்லையில் 60 சென்ட் இடம் உள்ளது.இதில், 30 சென்ட் இடத்தை அப்பகுதியைச் சேர்ந்த 5 பேர், கடந்த 20 ஆண்டுகளாக

விழுப்புரம்,-விழுப்புரம் அருகே அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடத்திலிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது.விழுப்புரம் அடுத்த கல்பட்டு கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முத்தாலவாழியம்மன் கோவிலுக்குச் சொந்தமாக சிறுவாக்கூர் கிராம எல்லையில் 60 சென்ட் இடம் உள்ளது.இதில், 30 சென்ட் இடத்தை அப்பகுதியைச் சேர்ந்த 5 பேர், கடந்த 20 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்து ஓட்டல், டீ மற்றும் பெட்டிக்கடைகளை வைத்துள்ளனர்.இது தொடர்பாக அறநிலையத்துறை மூலம் ஆக்கிரமிப்பு செய்துள்ளோருக்கு பல முறை நோட்டீஸ் அனுப்பியும் பலனில்லை.இதையடுத்து, இந்து சமய அறநிலைய துறை சார்பில் உதவி ஆணையர் ஜோதி, ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் நேற்று, காணை போலீசாரின் பாதுகாப்போடு ஆக்கிரமிப்புகளை பொக்லைன் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X