20,829 பேர்: மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி...தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்க ஏற்பாடு| Dinamalar

தமிழ்நாடு

20,829 பேர்: மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி...தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்க ஏற்பாடு

Added : ஜூலை 20, 2021
Share
விழுப்புரம்,-விழுப்புரம் மாவட்டத்தில் இந்தாண்டு பிளஸ் 2வில் 20 ஆயிரத்து 829 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்த மாணவர்களுக்கு அவர்கள் பயிலும் பள்ளிகளிலேயே வரும் 22ம் தேதி தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என சி.இ.ஓ., கிருஷ்ணப்பிரியா தெரிவித்துள்ளார்.கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் இயங்கவில்லை. ஊரடங்கால் அரசு விதிமுறைகளுக்குட்பட்டு அரசு மற்றும் தனியார்
 20,829 பேர்: மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி...தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்க ஏற்பாடு

விழுப்புரம்,-விழுப்புரம் மாவட்டத்தில் இந்தாண்டு பிளஸ் 2வில் 20 ஆயிரத்து 829 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த மாணவர்களுக்கு அவர்கள் பயிலும் பள்ளிகளிலேயே வரும் 22ம் தேதி தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என சி.இ.ஓ., கிருஷ்ணப்பிரியா தெரிவித்துள்ளார்.கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் இயங்கவில்லை. ஊரடங்கால் அரசு விதிமுறைகளுக்குட்பட்டு அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்பு மூலம் மாணவர்கள் வீடுகளில் இருந்தே பாடங்களைக் கற்றனர்.இந்த சூழலில், இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் கணினி அறிவியல் பாடப்பிரிவுகளில் உள்ள பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு இந்தாண்டிற்கான செய்முறை தேர்வு நடைபெற்றது.இதையடுத்து நோய் தாக்கம் தீவிரமடைந்ததால் பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், இவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.அதன் மூலம் பிளஸ் 2 மாணவர்கள், பத்தாம் வகுப்பில் மூன்று பாடப்பிரிவுகளில் எடுத்த அதிக மதிப்பெண் அடிப்படையிலும், பிளஸ் 2 செய்முறை தேர்வு அடிப்படையிலும் மதிப்பெண் வழங்க, அதிகாரிகள் முடிவு செய்து, நேற்று காலை 10:30 மணியளவில் பள்ளிக்கல்வி துறை மூலம் பிளஸ் 2 பொதுதேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.அதனடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் உள்ள 186 பள்ளிகளில் பிளஸ் 2 பயின்ற 10 ஆயிரத்து 75 மாணவர்கள், 10 ஆயிரத்து 754 மாணவிகள் உட்பட மொத்தம் 20 ஆயிரத்து 829 பேர் உள்ளிட்ட அனைவரும் தேர்ச்சி அடைந்தனர்.இது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா நிருபர்களிடம் கூறியதாவது:விழுப்புரம் மாவட்டத்தில், கொரோனா தொற்று சூழலையொட்டி அரசு விதிமுறைகளுக்குட்பட்டு பிளஸ் 2 தேர்வில் அனைவரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவ, மாணவிகளுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் வரும் 22ம் தேதி முதல் தலைமை ஆசிரியர்கள் மூலம் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக தலைமை ஆசிரியர்களுக்கு, கொரோனா விதிமுறையான சமூக இடைவெளி, முகக் கவசம் அணிதல், பள்ளி வளாகத்தில் கிருமிநாசினி தெளித்தல், சானிடைசர் ஏற்பாடு ஆகியவை குறித்து சுற்றறிக்கை அனுப்ப உள்ளோம்.

ஊரடங்கு தருணத்தில் பெற்றோர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டு அரசு பள்ளிகளில் இந்தாண்டு தங்களின் பிள்ளைகளை அதிக எண்ணிக்கையில் சேர்த்து வருகின்றனர்.அது மட்டுமின்றி, மாணவர்கள் 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையுள்ள பாடங்கள் தொடர்பாக அரசு தொலைக் காட்சியில் வரும் கல்விச் சேனலை கட்டாயம் காண வேண்டும்.

இதன் மூலம் நீங்கள் வீட்டிலிருந்தே பாடங்களை சரியான முறையில் புரிந்து கொள்ள முடியும். நோய் தொற்று குறைந்து பள்ளிகள் திறக்கும் வரை மாணவ, மாணவிகள் கல்வி தொலைக் காட்சி மூலம் பாடங்களைக் கற்க வேண்டும்.ஆசிரியர்களும், மாணவர்கள் பாடங்களை கவனிக்கின்றனரா என்பதை கண்காணிக்க வேண்டும்.இவ்வாறு சி.இ.ஓ., கிருஷ்ணபிரியா கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X