பொது செய்தி

தமிழ்நாடு

நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பு கலெக்டர் ஆய்வுக் கூட்டம்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
விழுப்புரம்,-விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், குடிநீர் மற்றும் நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பதைத் தடுப்பது குறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், பொதுப்பணித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, கலெக்டர் மோகன் தலைமை தாங்கி பேசுகையில், 'விழுப்புரம் அடுத்த நரையூரைச் சேர்ந்த நபர்கள்

விழுப்புரம்,-விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், குடிநீர் மற்றும் நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பதைத் தடுப்பது குறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், பொதுப்பணித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, கலெக்டர் மோகன் தலைமை தாங்கி பேசுகையில், 'விழுப்புரம் அடுத்த நரையூரைச் சேர்ந்த நபர்கள் தங்களுக்கு சொந்தமான பட்டா நிலத்தில் கிராம பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளிலிருந்து கழிவுநீர் கலந்து பயிர் சாகுபடி பாதிப்பிற்குள்ளாவதாகவும், அவ்வாறு இருந்தால் அதனை சரிசெய்ய முதன்மைச் செயலர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.அதன்பேரில், குழுவினர் நரையூரில் முகாமிட்டு மேல்நடவடிக்கை எடுப்பது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.டி.ஆர்.ஓ., ராஜசேகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காஞ்சனா, துணை கலெக்டர் (நிலம்) திருமாறன், நகராட்சி கமிஷனர்கள் தட்சணாமூர்த்தி, ஜஹாங்கீர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராஜேந்திரன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் பழனிசாமி, பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் சரவணன் உட்பட பலர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X