பொது செய்தி

தமிழ்நாடு

பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் கடன் பெற விண்ணப்பம் வரவேற்பு

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
விழுப்புரம்,-கொரோனாவால் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவரின் குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடிய நபர் உயிரிழந்திருந்தால் கடன் திட்டம் வழங்கப்படவுள்ளது.கலெக்டர் மோகன் செய்திக்குறிப்பு;மாவட்டத்தில் கொரோனா பாதிப்பால் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவரின் குடும்பத்தில்

விழுப்புரம்,-கொரோனாவால் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவரின் குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடிய நபர் உயிரிழந்திருந்தால் கடன் திட்டம் வழங்கப்படவுள்ளது.கலெக்டர் மோகன் செய்திக்குறிப்பு;மாவட்டத்தில் கொரோனா பாதிப்பால் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவரின் குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடிய நபர் உயிரிழந்திருப்பின் அவர்களது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார வளர்ச்சிக் கழகம் ஸ்மைல் என்ற கடன் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவரின் குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.குடும்ப வருமானம் ஈட்டக்கூடிய நபரின் வயது 18 முதல் 60க்குள் இருக்க வேண்டும். இத்திட்டத்தில் அதிகபட்சமாக திட்டத் தொகை 5 லட்சம் ரூபாய் வரை இருக்கலாம்.திட்டத் தொகையில் 80 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 4 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும். மீதமுள்ள, 20 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 1 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும். ஆண்டிற்கு 6 சதவீதம் வட்டி விகிதத்தில் கடன் தொகை வழங்கப்படும்.இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புவோர், ஆவணங்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X