சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முன்விரோத தகராறு ஆட்டோ டிரைவர் கைது

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
திண்டிவனம்,-திண்டிவனத்தில் முன்விரோத தகராறில், வாலிபரைத் தாக்கிய ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.திண்டிவனம், மரக்காணம் ரோடு இந்திரா நகரைச் சேர்ந்தவர் தனசேகர் மகன் அபிநய வெங்கடேசன், 32; இவர் நேற்று முன்தினம் பூதேரியில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, கோட்டைமேடு பகுதியில் வழி மறித்த மூன்று பேர் கத்தி மற்றும் பீர் பாட்டிலால்

திண்டிவனம்,-திண்டிவனத்தில் முன்விரோத தகராறில், வாலிபரைத் தாக்கிய ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.திண்டிவனம், மரக்காணம் ரோடு இந்திரா நகரைச் சேர்ந்தவர் தனசேகர் மகன் அபிநய வெங்கடேசன், 32; இவர் நேற்று முன்தினம் பூதேரியில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, கோட்டைமேடு பகுதியில் வழி மறித்த மூன்று பேர் கத்தி மற்றும் பீர் பாட்டிலால் தாக்கினர்.இதுகுறித்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். அதில், பூதேரியைச் சேர்ந்த மதன் என்பவருக்கும், அபிநய வெங்கடேசனுக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.இதன் காரணமாக மதன் தலைமையில், அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் காளி, வெங்கடேசன் ஆகியோர் தாக்கியது தெரியவந்தது. உடன், காளி, 32; என்பவரை கைது செய்து மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X