சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஒன்றிய அலுவலகம் முன் அ.தி.மு.க.,வினர் முற்றுகை

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
விழுப்புரம்-டெண்டர் பெறப்பட்டு நடைபெற்ற ஊரக வளர்ச்சிப் பணிகள் நிறுத்தப்பட்டதை கண்டித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் காணை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.விழுப்புரம் அடுத்த காணை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நேற்று மதியம் 12:15 மணிக்கு, அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., முத்தமிழ்ச்செல்வன் தலைமையில் நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் திடீரென

விழுப்புரம்-டெண்டர் பெறப்பட்டு நடைபெற்ற ஊரக வளர்ச்சிப் பணிகள் நிறுத்தப்பட்டதை கண்டித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் காணை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.விழுப்புரம் அடுத்த காணை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நேற்று மதியம் 12:15 மணிக்கு, அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., முத்தமிழ்ச்செல்வன் தலைமையில் நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் திடீரென முற்றுகையிட்டடு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது அவர்கள் கூறுகையில், காணை ஊராட்சி ஒன்றியத்தில் கடந்தாண்டு முறையாக அரசின் டெண்டர் பெறப்பட்டு நடந்த தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், தனிநபர் கிணறு, வாய்க்கால், சாலை, குடிநீர் கிணறு, குடிமராமத்து உள்ளிட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் நடைபெற்றது.தேர்தலையொட்டி, இப்பணிகள் நிறுத்தப்பட்டன. தற்போது தி.மு.க., அரசு பொறுப்பேற்று பல மாதங்களை கடந்தும் இந்த பணிகளை துவங்குவதற்கு எங்களுக்கு அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்' என்றனர்.பின்னர், பி.டி.ஓ., மணிவாசகத்தை சந்தித்து, 2 நாட்களில் பணிகள் துவங்கவில்லை என்றால் மறியல் போராட்டங்களில் ஈடுபடுவோம் என தெரிவித்துச் சென்றனர்.இது சம்பந்தமாக, பி.டி.ஓ., மணிவாசகம் கூறுகையில், 'இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளோம். விரைவில் பணிகள் துவங்கிவிடும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X