பொது செய்தி

தமிழ்நாடு

மகன்களிடம் இருந்து சொத்தை மீட்டுத்தர கோரி மூதாட்டி மனு

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
விழுப்புரம்-மகன்களிடம் இருந்து தங்களின் சொத்தை மீட்டு தரக்கோரி, மூதாட்டி கலெக்டரிடம் மனு அளித்தார்.திண்டிவனம் அடுத்த சலவாதி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுந்தரம் மனைவி நீலாவதி, 86; இவர், கலெக்டர் மோகனிடம் வழங்கிய மனு:எனது மகன்கள் புருஷோத்தமன், ஏழுமலை, நடராஜன் ஆகியோர் என்னையும், எனது கணவரையும் அடித்து விரட்டியதோடு மட்டுமின்றி, கணவர் பாலசுந்தரம் சுயமாக சம்பாதித்த 2 கோடி

விழுப்புரம்-மகன்களிடம் இருந்து தங்களின் சொத்தை மீட்டு தரக்கோரி, மூதாட்டி கலெக்டரிடம் மனு அளித்தார்.திண்டிவனம் அடுத்த சலவாதி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுந்தரம் மனைவி நீலாவதி, 86; இவர், கலெக்டர் மோகனிடம் வழங்கிய மனு:எனது மகன்கள் புருஷோத்தமன், ஏழுமலை, நடராஜன் ஆகியோர் என்னையும், எனது கணவரையும் அடித்து விரட்டியதோடு மட்டுமின்றி, கணவர் பாலசுந்தரம் சுயமாக சம்பாதித்த 2 கோடி ரூபாய் மதிப்பிலான 5 ஏக்கர் நிலத்தையும் போலி ஆவணம் மூலம் எழுதி கொண்டனர்.இந்த சூழலில் கடந்த 2004ம் ஆண்டு எனது கணவர் இறந்தார். மகன்கள் யாரும் எனக்கு உணவு கூட வழங்கவில்லை. இரு மகன்கள் ஓட்டல் நடத்தி நல்ல முறையில் சம்பாதிக்கும் சூழல் இருந்தும் மருத்துவ செலவுக்கு கூட எனக்கு பணம் வழங்க மறுக்கின்றனர்.நான், கடந்த 12 ஆண்டுகளாக எனது இரு மகள்களோடு வசிக்கிறேன். கடைசி காலத்தில் பெற்றோரை கவனித்துக் கொள்ள வேண்டிய எனது மகன்கள் போலி ஆவணம் மூலம் எங்களின் சொத்தை அபகரித்துள்ளனர்.இந்த ஆவணத்தை ரத்து செய்து, எங்கள் நிலத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனுவை பெற்ற கலெக்டர், தாசில்தார் வெங்கடசுப்ரமணியனை அழைத்து, நீலாவதி பிரச்னை சம்பந்தமாக அவர் மகன்களின் வீட்டிற்கு நேரடியாக சென்று விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X