பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி செலுத்திக் கொள்ள அமைச்சர் வேண்டுகோள்

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
செஞ்சி-'மூன்றாவது அலையில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க பொது மக்கள் தாமாக முன் வந்து கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்' என அமைச்சர் மஸ்தான் பேசினார்.செஞ்சி, கிருஷ்ணாபுரம் புனித மிக்கேல் மேல்நிலை பள்ளியில் நேற்று கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. முகாமை துவக்கி வைத்து அமைச்சர் மஸ்தான் பேசுகையில், 'முதல்வரின் தீவிர நடவடிக்கையால் தமிழகத்தில் இரண்டாவது அலை

செஞ்சி-'மூன்றாவது அலையில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க பொது மக்கள் தாமாக முன் வந்து கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்' என அமைச்சர் மஸ்தான் பேசினார்.செஞ்சி, கிருஷ்ணாபுரம் புனித மிக்கேல் மேல்நிலை பள்ளியில் நேற்று கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. முகாமை துவக்கி வைத்து அமைச்சர் மஸ்தான் பேசுகையில், 'முதல்வரின் தீவிர நடவடிக்கையால் தமிழகத்தில் இரண்டாவது அலை வேகமாக கட்டுக்குள் வந்துள்ளது.மூன்றாவது அலையை எதிர் கொள்ள தயார் நிலையில் உள்ளது. மூன்றாவது அலையில் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாத்து கொள்ள பொதுமக்கள் தாங்களாக முன்வந்து கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்' என்றார்.முகாமில், சத்தியமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் மலர்விழி, பாக்கியலட்சுமி, பங்கு தந்தை பால்ராஜ், பள்ளி முதல்வர் நாயகம், வருவாய் ஆய்வாளர் கண்ணன், பேரூராட்சி மேற்பார்வையாளர் ரமேஷ், சுகாதார ஆய்வாளர் ஏழுமலை, மாஜி கவுன்சிலர் செயல்மணி பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X