பொது செய்தி

தமிழ்நாடு

சமையல் எண்ணெய் பதப்படுத்தும் தொழிலுக்கு விண்ணப்பம் வரவேற்பு

Added : ஜூலை 20, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமையல் எண்ணெய் பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என வேளாண் வணிக துணை இயக்குனர் உலகம்மை முருககனி தெரிவித்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பு:சமையல் எண்ணெய் பதப்படுத்தும் தொழிலுக்காக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 63 மையங்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வேர்க்கடலை, எள், தேங்காய் ஆகிய விலை

கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமையல் எண்ணெய் பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என வேளாண் வணிக துணை இயக்குனர் உலகம்மை முருககனி தெரிவித்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பு:சமையல் எண்ணெய் பதப்படுத்தும் தொழிலுக்காக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 63 மையங்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வேர்க்கடலை, எள், தேங்காய் ஆகிய விலை பொருட்களை சமையல் எண்ணெயாக மதிப்புக்கூட்டி விற்பனை செய்யும் மையங்களை ஏற்படுத்த விருப்பம் உள்ள தனி நபர், சுய உதவி குழுக்கள் அல்லது உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.இதற்கு, 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். ஏற்கனவே எண்ணெய் வித்து மதிப்பு கூட்டு மையம் வைத்திருப்பவர்கள் அல்லது புதிதாக துவங்க உள்ள பயனாளிகளும் விண்ணப்பிக்கலாம்.திட்ட மதிப்பீட்டில் 35 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாய் வரை மானியம் பெறலாம். மேலும், வர்த்தக முத்திரை மற்றும் சந்தைபடுத்துதலுக்கு 50 சதவீத மானியம் வழங்கப்படும்.இத்திட்டத்தில் பயனடைய விரும்புவோர் வட்டார உதவி வேளாண்மை அலுவலர்களை (வேளாண் வணிகம்) தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X